Home கலை உலகம் சிங்கம் -2 படப்பிடிப்பிற்காக சூர்யா மலேசியா வருகை

சிங்கம் -2 படப்பிடிப்பிற்காக சூர்யா மலேசியா வருகை

635
0
SHARE
Ad

கோலாலம்பூர், மார்ச் 17 – சூர்யாவின் நடிப்பில் இயக்குநர் ஹரியின் இயக்கத்தில் வெளிவந்து மகத்தான வெற்றி பெற்ற படம் சிங்கம்.

இதே படம் இந்தியிலும் அஜய் தேவகன் கதாநாயகனாக நடிக்க சிங்கம் என்ற பெயரிலேயே வெளிவந்து 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

ஹாலிவுட் ஆங்கிலப் படங்கள்தான் இரண்டாவது பாகம், மூன்றாவது பாகம் என தொடர்ச்சியாக வெளியிடப்படும். அந்த பாணியில் இப்போது சிங்கம் படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்கப்பட்டு வருகின்றது.

#TamilSchoolmychoice

நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிக்க ஹரியே இந்த சிங்கம் -2 படத்தையும் இயக்கி வருகின்றார்.

சிங்கம் படத்தில் சூர்யாவை உயர்நிலை ரகசிய போலீல் அதிகாரியாக அமைச்சர் விஜயகுமார் நியமிப்பது போல் படம் முடிந்திருக்கும். தற்போது அதன் தொடர்ச்சியாக அந்த உயர்நிலை அதிகாரியாக இருந்து சூர்யா நிகழ்த்தும் சாகசங்களை மையமாக வைத்து சிங்கம் படத்தின் இரண்டாவது பாகம் தயாராகி வருகின்றது.

இறுதிக் கட்ட படப்பிடிப்பில் இருக்கும் இந்த படத்தின் சில காட்சிகள் மலேசியாவில் படமாக்கப்படுகின்றன. அதற்காக சிங்கம் – 2 படத்தின் படப்பிடிப்பு குழுவினர் தற்போது மலேசியாவில் முகாமிட்டுள்ளனர்.

ரசிகர்களின் தொல்லை இருக்கும் என்பதால் படப்பிடிப்பு நடைபெறும் இடங்கள் ரகசியமாக வைக்கப்பட்டு படப்பிடிப்பு மலேசியாவில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.