Home இந்தியா கூட்டணியிலிருந்து விலகுவதில் தி.மு.க. உறுதி: மீண்டும் கருணாநிதி வலியுறுத்து

கூட்டணியிலிருந்து விலகுவதில் தி.மு.க. உறுதி: மீண்டும் கருணாநிதி வலியுறுத்து

590
0
SHARE
Ad

karunanidhi_350_030713040750சென்னை, மார்ச் 17 – இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வராவிட்டால் அமைச்சரவையிலிருந்து விலகுவதில் தி.மு.க. உறுதியாக உள்ளது என அக்கட்சி தலைவர் கருணாநிதி இன்று மீண்டும் வலியுறுத்தி கூறியுள்ளார்.

இலங்கையில், விடுதலை புலிகளுடன் நடந்த கடைசி கட்ட போரின் போது, பெருமளவில் போர்க் குற்றங்கள் நிகழ்ந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த போர்க் குற்றங்கள் தொடர்பாக, ஐக்கிய நாடுகள் சபையின், மனித உரிமை கமிஷனில், இலங்கைக்கு எதிராக, அமெரிக்கா தீர்மானம் கொண்டுவர உள்ளது.

சில நாட்களுக்கு முன்னர், இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை, மத்திய அரசு ஆதரிக்காவிட்டால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில்இருந்து, தி.மு.க., விலகும் சூழ்நிலை உருவாகலாம் என, அந்தக் கட்சியின் தலைவர் கருணாநிதி மிரட்டல் விடுத்தார்.

#TamilSchoolmychoice

இந்த மிரட்டலை காங்கிரஸ் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என டில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று கூட மத்திய அரசிடம் இருந்து எவ்வித பதிலும் வரவில்லை என்றார். இதனை தொடர்ந்து இன்று கருணாநிதி நிருபர்களிடம் பேசுகையில் விலகுவது குறி்‌த்து மீண்டும் வலியுறுத்தி ‌கூறினார்.

இது தொடர்பாக காரைக்குடியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில்பேசிய மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் இலங்கையில் சுதந்திரமான சர்வதேச விசாரணை நடைபெற வேண்டும் என தீர்மானம் கொண்டு வரப்பட்டால், அதனை இந்தியா ஆதரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என கூறினார்.மேலும் அவர், தமிழ் மக்களுடன் இந்தியா இருக்கும் என்றும் மாணவர்களுக்கு உறுதியளித்தார்.

இந்நிலையில் கருணாநிதி இன்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:=

“அமெரிக்க தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என தீர்மானத்தில் மாற்றம் செய்ய வேண்டும் எனக்கூறி பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு கடிதம் எழுதியுள்ளேன் . மேலும் அவர், இலங்கையில் நடந்த போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணைக்குழு அமைக்க வேண்டும். குறுகிய காலத்திற்குள் விசாரணையை முடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு நடவடிக்கை எடுக்க தவறினால் மத்திய அமைச்சரவையில் தி.மு.க., நீடிக்காது. கூட்டணியிலிருந்து விலகும் முடிவில் தி.மு.க., உறுதியாக உள்ளது. தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவராவிட்டால் இலங்கை தமிழர்களுக்கு அநீதி ஏற்படும்’\” – இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் தமிழகத்தில் சிங்களர்கள் தாக்கப்படுவது சரியல்ல என்றும் கருணாநிதி கூறினார்.