Home Featured இந்தியா டுவிட்டரில் ஸ்மிருதி இரானி – பிரியங்கா சதுர்வேதி மோதல்!

டுவிட்டரில் ஸ்மிருதி இரானி – பிரியங்கா சதுர்வேதி மோதல்!

697
0
SHARE
Ad

smrithi1_2865268fபுதுடெல்லி – காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோர் டுவிட்டரில் வார்த்தை மோதலில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி வேறு ஒரு நபருடன் டுவிட்டரில் உரையாடிக் கொண்டிருக்கும் போது மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குறித்து கருத்து கூற, அதற்கு இரானி பதில் கூற இருவருக்குமிடையே டுவிட்டரில் வார்த்தை மோதல்கள் தொடர்ந்தன.

இங்கு பாலியல் பலாத்காரம் / கொலை மிரட்டல் விவகாரத்தில் விசாரணையை ஏற்படுத்த நான் போராடிக் கொண்டிருக்கிறேன், ஆனால் ஸ்மிருதி இரானிக்கு இஸட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது என்று டுவீட் செய்ய, அதற்கு பதில் அளித்த மத்திய மனிதவள அமைச்சர் ஸ்மிருதி இரானி, ‘எனக்கு இசட் பிரிவு பாதுகாப்பு இல்லை’ என்று கூறினார்.

#TamilSchoolmychoice

அதற்கு பிரியங்கா சதுர்வேதி; எனக்கு உள்துறை அமைச்சகத்தின் உள்விவகாரங்கள் தெரியாது. நான் ஊடகங்களின் அடிப்படையில் கூறியுள்ளேன். அப்போது உங்களுக்கு பாதுகாப்பே இல்லை என்று நான் அனுமானித்துக் கொள்ள வேண்டுமா? என்றார்.

அதற்கு ஸ்மிருதி இரானி; எனது பாதுகாப்பில் உங்களுக்கு ஏன் இவ்வளவு அக்கறை? ஏதாவது திட்டமிடுகிறீர்களா? என கேட்டார்.

அதற்கு பிரியங்கா சதுர்வேதி; எனது நேரம் பொன்னானது. எனவே அந்த வகையில் நீங்கள் கவலைப்பட வேண்டாம். நீங்கள் இன்னொரு பல்கலை. வளாகக் கொந்தளிப்பு ஏற்படுத்துவதில் நீங்கள் அவசியம் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

அதற்கு ஸ்மிருதி இரானி; நீங்கள் கூறுவது ராகுல் காந்தியின் கோட்டையாயிற்றே. இல்லையில்லை அசாமை இழந்ததுதான். இனிய நாள் என்றார்.

அதற்கு பிரியங்கா சதுர்வேதி; தொடர்ந்து தோல்வியைத் தழுவினாலும் அமைச்சரவையில் அமைச்சராக நீங்கள் ஆவது உங்கள் கோட்டை. உங்களுக்கும் ஒளிமிகுந்த நாளாக அமையட்டும் என்றார். இவ்வாறு இருவரும் மாறி மாறி டுவிட்டரில் வார்த்தை மோதலில் ஈடுபட்டனர்.