கோலாலம்பூர் – சரவாக் மாநிலத் தேர்தலுக்கு ஆன மொத்த செலவு 135.6 மில்லியன் ரிங்கிட் என்று பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அசாலினா ஒத்மான், நாடாளுமன்றத்தில் ஜசெக செகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துள்ளார்.
அதேவேளையில், சரவாக்கில் கடந்த மே 4-ம் தேதி நடந்த அமைச்சரவைக் கூட்டத்திற்கு ஆகிய செலவு 31,217 ரிங்கிட் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2009-ம் ஆண்டிற்குப் பிறகு, புத்ராஜெயாவிற்கு வெளியே நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டம் இது ஆகும்.
இதனிடையே, கடந்த மே 7-ம் தேதி நடைபெற்ற சரவாக் தேர்தலில், மொத்தமுள்ள 82 தொகுதிகளில் 72 தொகுதிகளை பாரிசான் கைப்பற்றி ஆட்சியைத் தக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.