Home இந்தியா ஸ்மிர்தி பட்டப்படிப்பு முடித்திருக்கிறாரா? இல்லையா? – புதிய சர்ச்சை!

ஸ்மிர்தி பட்டப்படிப்பு முடித்திருக்கிறாரா? இல்லையா? – புதிய சர்ச்சை!

863
0
SHARE
Ad

smirthi_2270361fபுதுடெல்லி – மத்திய அமைச்சர் ஸ்மிர்தி இரானி பட்டப்படிப்பை முடித்திருக்கிறாரா? இல்லையா? என்ற புதிய சர்ச்சை எழுந்திருக்கிறது.

காரணம், கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட போது, அந்த வேட்புமனுத் தாக்கலில், டெல்லி திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் வர்த்தக இளங்கலைப் பட்டம் பெற்றிருப்பதாகக் குறிப்பிட்டிருந்த ஸ்மிர்தி, தற்போதைய மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுவில் பட்டப்படிப்பை முடிக்கவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இது தற்போது அரசியல் தலைவர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.