சென்னை – நேற்று நடைபெற்ற தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அந்தப் படக் காட்சிகளின் தொகுப்பை இங்கே காணலாம்:-
திமுக சார்பில் வருகை தந்த ஸ்டாலின் – திமுகவின் மற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் சேகர்பாபு, இ.வ.வேலு, பொன்முடி ஆகியோருடன் – தோற்றுப் போன சரத்குமாருக்கு முன் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டதாகவும், ஸ்டாலினுக்குப் பின்வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டதாகவும், கருணாநிதி பதவியேற்பு முடிந்த அடுத்த இரண்டு மணி நேரத்தில் அறிக்கை விட்டார்.
தனது மகனுக்கு தரப்படாத முக்கியத்துவம் சரத்குமாருக்குத் தரப்பட்டது என கருணாநிதியின் காதில் புகைச்சலைக் கிளப்பிய படக் காட்சி இதுதான்! சரத்குமார் அருகில் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தா.பாண்டியன் மற்றும் சென்னை மாநகராட்சித் தலைவர் சைதை துரைசாமி…
இசையமைப்பாளர் தேவா…
பதவியேற்பு விழாவில் திரளாகக் கலந்து கொண்ட பிரமுகர்கள்..
-செல்லியல் தொகுப்பு