புதுடெல்லி – பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசு முறை பயணத்தை முடித்துக்கொண்டு ஈரான் நாட்டில் இருந்து இன்று டெல்லி திரும்பினார். பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் ஈரான் சென்றார்.
தெஹ்ரானில் அவர் ஈரான் அதிபர் ஹஸன் ரூஹானியை நேற்று சந்தித்து பேசினார். அப்போது இரு நாடுகளும் கூட்டாக அச்சுறுத்தி வரும் பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிராக உளவுத்துறை தகவல்கலை இருநாடுகளும் பகிர்ந்து கொள்ள ஒப்பு கொள்ளபட்டது.
இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பின் போது இந்தியா, ஈரான் இடையே 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. ஈரானின் சபஹர் துறைமுகத்தை பிராந்திய மையமாக மேம்படுத்த இந்தியா, ஈரான், ஆப்கானிஸ்தான் இடையே வரலாற்று சிறப்புமிக்க முத்தரப்பு ஒப்பந்தமும் கையெழுத்தானது.
நிதின் கட்காரி உள்பட 3 நாடுகளின் போக்குவரத்து துறை அமைச்சர்களும் இதில் கையெழுத்திட்டனர். அதில் வரலாற்று சிறப்புமிக்க சபஹர் துறைமுக ஒப்பந்தமும் ஒன்று. சபஹர் துறைமுகத்தை மேம்படுத்த இந்தியா ரூ.1, 360 கோடி முதலீடு செய்கிறது.
ஈரானின் சபஹர் துறைமுகத்தை மேம்படுத்துவது மூலம் இருநாட்டு வர்த்தகம் மேலும் அதிகரிக்கும். வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் இரண்டு நாள் அரசு முறை பயணத்தை முடித்துக்கொண்டு தெஹ்ரானில் இருந்து தனிவிமானம் மூலம் இன்று டெல்லி திரும்பினார்.