தனது மனைவி மற்றும் மகன் உதயநிதி குடும்பத்தினருடன் ஸ்டாலின் சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு மலேசியா வந்தடைந்துள்ளார்.
மலேசியாவில் எந்தப் பகுதியில் ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் ஓய்வெடுப்பார் என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
கோலாலம்பூரிலேயே ஸ்டாலின் குடும்பத்தினரோடு தங்கியிருப்பாரா அல்லது லங்காவி தீவு போன்ற அமைதியான அதிகமான மக்கள் தொந்தரவில்லாத கடற்கரை பகுதிகளுக்கோ அல்லது கேமரன் மலை போன்ற மலைப் பிரதேசங்களுக்கு சென்று ஓய்வெடுப்பாரா என்பது தெரியவில்லை.
பார்ப்போம்! எந்த மலேசிய இந்தியர் கண்களில் ஸ்டாலினோ, அவரது குடும்பத்தினரோ தென்படுகிறார்கள் என்று!
எப்படியும், முகநூல் பக்கத்தில் பதிவிட்டு விடுவார்களே!