புதுடில்லி – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைத்துவம் இரண்டு ஆண்டுகளைப் பூர்த்தி செய்திருக்கும் நிலையில், அவரது நடவடிக்கைகளையும், நிகழ்ச்சிகளையும் விளக்கும் அவரது இணையத் தளம் தமிழ் உட்பட ஆறு இந்திய மொழிகளில் இனி இடம் பெறும்.
தற்போது ஆங்கிலம், இந்தி என இரு மொழிகளில் மட்டும் மோடியின் இணையத் தளம் செயல்பட்டு வருகின்றது. அவருக்கென பிரத்தியேக குறுஞ்செயலியும் (மொபைல் எப்) செயல்படுகிறது.
தமிழ் உட்பட, தெலுங்கு, மலையாளம், குஜராத்தி, மராத்தி, பெங்காலி ஆகிய 6 மொழிகளில் மோடியின் இணையத் தளம் இனி செயல்படும்.
இந்த புதிய இணையத் தள சேவைகளை மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இன்று தொடக்கி வைத்தார்.
சுஷ்மா சுவராஜ் இன்று மோடியின் ஆறு மொழிகளிலான இணையத் தளத்தைத் தொடக்கி வைத்தபோது….