Home Featured உலகம் குத்துச் சண்டை மாவீரர் முகமது அலி மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் சோகம்!

குத்துச் சண்டை மாவீரர் முகமது அலி மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் சோகம்!

604
0
SHARE
Ad

பீனிக்ஸ் (அரிசோனோ) – விளையாட்டுத் துறையின் சகாப்தமாகவும், குத்துச்சண்டை துறையில் காலத்தால் அழிக்க முடியாத அளவுக்குப் பெயர் பொறித்தவருமான முகமது அலி, தன்னைப் பீடித்திருந்த நோய்களோடு நடத்தி வந்த நீண்ட காலப் போராட்டம் முடிவை நெருங்கிக் கொண்டிருப்பதாக அமெரிக்கத் தகவல் ஊடகங்கள்  தெரிவித்துள்ளன.

Muhammad-Ali-முகமது அலி – அன்று இளம் குத்துச் சண்டை வீரராக….

அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்திலுள்ள, பீனிக்ஸ் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் மரணத்தை நெருங்கும் தறுவாயில், தனது இறுதி நாட்களை – அல்லது கணங்களை முகமது எண்ணிக் கொண்டிருக்கின்றார்.

#TamilSchoolmychoice

74 வயதான அலியின் உடல் நிலை சீராக இருந்து வந்தாலும், அவரது உடல் நலம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக தகவல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அவர் தற்போது பிராணவாயுக் கருவிகளின் உதவியோடு, நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றார்.

இன்னொரு புறத்தில், அவரது இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

Muhammad Ali-2014

முகமது அலி – இன்று – கடந்த 2014ஆம் ஆண்டில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தபோது…

முகமது அலி 30 ஆண்டுகளுக்கும் மேலாக பார்க்கின்சன் நோயால் அவதிப்பட்டு வருகின்றார்.  முதுமை, குத்துச்சண்டை போட்டிகளின் போது தலையில் விழுந்த குத்துக்களின் தாக்கங்கள் காரணமாக, அவருக்கு வேறு சில உடல் நலக் கோளாறுகளும் இருக்கின்றன.