Home Featured நாடு ஜனவரியில் இருந்து மே மாதம் வரை 567 குழந்தைகள் மாயம்!

ஜனவரியில் இருந்து மே மாதம் வரை 567 குழந்தைகள் மாயம்!

450
0
SHARE
Ad

PDRMகோலாலம்பூர் – கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து மே மாத இறுதி வரை 567 குழந்தைகள் காணாமல் போயிருக்கும் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக புக்கிட் அமான் பாலியல், மகளிர் மற்றும் குழந்தைதைகள் விசாரணைப் பிரிவு அறிவித்துள்ளது.

எனினும், அவற்றில் 374 குழந்தைகள் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் சிஐடி பிரிவின் துணை இயக்குநர் லா ஹோங் சூன் அறிவித்துள்ளார்.

“567 குழந்தைகளில், 193 குழந்தைதைகள் இன்னும் கண்டுபிடிக்கப்படாமலேயே இருக்கிறார்கள். காவல்துறை அதனை விசாரணை செய்து வருகின்றது” என்று கோலாலம்பூரில் இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மலேசியாவிலேயே சிலாங்கூரில் தான் குழந்தைகள் மாயமான சம்பவங்கள் அதிகளவு பதிவாகியுள்ளன. அதன் படி சிலாங்கூரில் 285 சம்பவங்களும், ஜோகூரில் 264 சம்பவங்களும், கெடாவில் 234 சம்பவங்களும், கோலாலம்பூரில் 175 சம்பவங்களும் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.