Home Featured உலகம் கனடா பிணைக் கைதியைக் கொலை செய்தது அபு சயாப்!

கனடா பிணைக் கைதியைக் கொலை செய்தது அபு சயாப்!

1007
0
SHARE
Ad

Robert hall John Ridsdel Inquirer ANN 130616ஜாம்போங்கா நகரம் – தாங்கள் கேட்ட 600 மில்லியன் பெசோ (53.2 மில்லியன் ரிங்கிட்) பிணைத் தொகையைக் கொடுக்காததால், கடத்தி வைத்திருந்த பிணைக் கைதிகளில் ஒருவரை இன்று திங்கட்கிழமை மதியம் 3 மணியளவில் கொலை செய்துள்ளனர் அபு சயாப் தீவிரவாதிகள்.

கனடாவைச் சேர்ந்த ராபர்ட் ஹால் என்பவரை இன்று பிற்பகல் அவர்கள் கொலை செய்துவிட்டதாக அபு சயாப்பால் நியமிக்கப்பட்டுள்ள பேச்சாளர் அபு ராமி ‘த பிலிப்பைன் இன்கொயரர்’ என்ற பத்திரிக்கைக்கு செல்பேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

ஹாலின் சடலம் இன்று ஜோலோ நகரில் எங்காவது காணப்படலாம் என்றும் அபு சயாப் தகவல் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

கனடாவைச் சேர்ந்த ராபர்ட் ஹால், நார்வே நாட்டைச் சேர்ந்த ஜார்டான் செக்கிங்ஸ்டட் மற்றும் பிலிப்பைன்சை சேர்ந்த மாரிடெஸ் ப்ளோர் ஆகியோரை விடுவிக்க அபு சயாப் பிணைத் தொகை கேட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.