Home Featured உலகம் ஜோலோ அருகே துண்டிக்கப்பட்ட தலை கண்டெடுக்கப்பட்டது!

ஜோலோ அருகே துண்டிக்கப்பட்ட தலை கண்டெடுக்கப்பட்டது!

671
0
SHARE
Ad

joloஜோலோ – கனடா நாட்டவர் ராபர்ட் ஹாலின் தலையைத் துண்டித்துக் கொலை செய்துவிட்டதாக அபு சயாப் நேற்று அறிவித்த அடுத்த சில மணி நேரங்களில், துண்டிக்கப்பட்ட தலை ஒன்று ஜோலோ நகரில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் பை ஒன்றில் வைக்கப்பட்டிருந்த அந்தத் தலை சான்செஸ் வீதி அருகே நேற்று இரவு 9 மணியளவில் கண்டெடுக்கப்பட்டதாக பிலிப்பைன்ஸ் காவல்துறை அறிவித்துள்ளது.

எனினும், அந்தத் தலை ராபர்ட் ஹாலின் தலை தானா என்பதை முழுமையான பரிசோதனைகளுக்குப் பின்னரே உறுதிப்படுத்தப்படும் என்றும் காவல்துறை அறிவித்துள்ளது.

#TamilSchoolmychoice