புதுடில்லி – இந்தியப் பொருளாதாரத்தில் மேலும் விரிவான சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் நோக்கிலும், வலுப்படுத்தும் நோக்கிலும், அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையிலும், இன்று பல அறிவிப்புகளை நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு வெளியிட்டுள்ளது.
பொது வான் போக்குவரத்து – தற்காப்பு ஆகிய துறைகளில் இனி 100 சதவீத அந்நிய முதலீடுகள் மேற்கொள்ளப்படலாம் என புதுடில்லி அறிவித்துள்ளது.
மருந்துகள் உற்பத்தித் துறையிலும் 100 சதவீத அந்நிய முதலீடுகள் இனி அனுமதிக்கப்படும் என்றும் மோடி அரசாங்கம் அறிவித்துள்ளது.