Home Featured இந்தியா பெங்களூரின் முதல் பெண் வாடகைக் கார் ஓட்டுநர் தற்கொலை!

பெங்களூரின் முதல் பெண் வாடகைக் கார் ஓட்டுநர் தற்கொலை!

668
0
SHARE
Ad

woman-uber-driver-bangalore-bharathi_650x400_61467092829

பெங்களூரு – பெங்களூரில் பிரபல உபெர் (Uber Taxi) நிறுவனத்தில் வாடகைக் கார் ஓட்டுநராக பணியாற்றி வந்த பாரதி வீரத், தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகக் காணப்பட்டார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் பெங்களூரின் முதல் பெண் வாடகைக் கார் ஓட்டுநர் என்ற பெருமையுடன் கார் ஓட்டும் பணியில் சேர்ந்த போது ஊடகங்களின் தலைப்பில் செய்தியில் இடம்பெற்று புகழ்பெற்றார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், பெங்களூரில் நாகஷெட்டிஹல்லி என்ற பகுதியில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்த அவர், நேற்று திங்கட்கிழமை இரவு வீட்டிலுள்ள அறை ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்துள்ளார்.

அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த வீட்டின் உரிமையாளர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தற்கொலை குறித்து கடிதம் எதுவும் அங்கு இல்லை என்பதால், இம்மரணத்தில் காவல்துறைத் தற்போது வெவ்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றது.