Home Featured கலையுலகம் ‘மறவன்’ திரைப்படத்திற்கு அனைத்துலக விருது!

‘மறவன்’ திரைப்படத்திற்கு அனைத்துலக விருது!

1443
0
SHARE
Ad

Maravan 3

கோலாலம்பூர் – நியூயார்க் / தாக்காவில் நடைபெற்ற அனைத்துலக திறந்தவெளி திரைப்பட விழா 2016-ல், மலேசியப் படமான ‘மறவன்’, ‘COUNTRY BEST AWARD’ என்ற அனைத்துலக விருதை வென்றுள்ளது.

மேலும், இந்த வருடத்திற்கான, மெல்பர்ன் ஃபீனிக்ஸ் பிலிம் பெஸ்டிவலில், அரையிறுதி வரைக்கும் தேர்வாகி மலேசியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளது.

#TamilSchoolmychoice

பார்சிலோனா, ரஷியா, சிங்கப்பூர் மற்றும் ஹாலந்து ஆகிய நாடுகளில் நடைபெற்ற திரைப்பட விழாக்களிலும் மறவன் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Maravan1இது குறித்து மறவன் இயக்குநர் எஸ்.டி.புவனேந்திரன் இன்று தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள தகவலில், மறவன் படத்தில் பணியாற்றியவர்களுக்கும், அத்திரைப்படத்திற்கு ஆதரவு தந்த ரசிகர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

Maravanநடிகர் ஹரிதாஸ், அஸ்ட்ரோ குமரேசன், டேனிஸ் குமார், சங்கீதா கிருஷ்ணசாமி, சீலன், புஷ்பா நாராயண், லோகநாதன், மனோ ஷான் உள்ளிட்ட முன்னணி மலேசிய நட்சத்திரங்களின் நடிப்பில் உருவான ‘மறவன்’ கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி நாடெங்கிலும் வெளியாகி ரசிகர்களிடையே பெரிதும் வரவேற்பினைப் பெற்றது.

மறவனில் அன்பா கதாப்பாத்திரத்தில் நடித்த ஹரிதாசின் நடிப்பும், வசனங்களும் மலேசிய ரசிகர்களிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியதோடு, இன்று வரை அவை பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

‘மறவன்’ திரைப்படத்தின் விமர்சனத்தை இந்த இணைப்பின் வழியாகப் படிக்கலாம்.

திரைவிமர்சனம்: மறவன் – நெஞ்சைத் தொடும் மலேசிய திரைப்ப(பா)டம்!