ஜோர்ஜ் டவுன் – பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் கைது செய்யப்பட்டு இன்று பினாங்கு அமர்வு நீதிமன்றத்தில் (செஷன்ஸ்) குற்றம் சாட்டப்படுவதை முன்னிட்டு, பல முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை முதல் குழுமத் தொடங்கியுள்ளனர்.
நீதிமன்ற வளாகத்தில் ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜசெக தலைவர்களில் ஒருவருமான எம்.குலசேகரன்….
பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி – ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன்…
முன்னாள் அம்னோ அமைச்சரும், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கப் பாடுபட்டு வருபவருமான டத்தோ சைட் இப்ராகிம்…
லிம் கிட் சியாங் தனது மனைவியுடன் நீதிமன்ற வளாகம் வந்தடைந்தபோது – பலத்த ஆதரவு முழக்கங்களுடன் வரவேற்கப்பட்டனர்…
இதற்கிடையில் ஒரு மாநில முதல்வரை இரவு முழுவதும் காவலில் வைக்க வேண்டிய அவசியம் என்ன என பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ கேள்வி எழுப்பி உள்ளார்.
நேற்று இரவு முழுவதும் பினாங்கு மாநில ஊழல் தடுப்பு ஆணைய தலைமையகத்தில் லிம் குவான் எங்கிற்கு ஆதரவாகத் திரண்ட ஜசெக ஆதரவாளர்களோடு, கட்சித் தலைவர் லிம் கிட் சியாங்கும் இணைந்து கொண்டார்.
(படங்கள்: டுவிட்டர்)