Home Featured தமிழ் நாடு திமுகவின் ஜெகத்ரட்சகன் மீது வருமான வரி சோதனை!

திமுகவின் ஜெகத்ரட்சகன் மீது வருமான வரி சோதனை!

875
0
SHARE
Ad

சென்னை: திமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான,  ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.

Jagathrathagan-DMKஜெகத்ரட்சகனுக்கு (படம்) சொந்தமான இல்லங்கள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலை, அலுவலகங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அவருக்கு சொந்தமான மதுபான ஆலை, நட்சத்திர விடுதி போன்ற இடங்களிலும் சோதனைகள் நடப்பதாக தகவல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதிமுகவில் தீவிர எம்ஜிஆர் இரசிகராக தனது அரசியல் வாழ்வைத் தொடங்கிய ஜெகத்ரட்சகன் பின்னர் ஜெயலலிதாவோடு ஏற்பட்ட பிணக்கின் காரணமாக, திமுகவில் இணைந்தார்.

#TamilSchoolmychoice

காங்கிரஸ்-திமுக ஆட்சியின்போது திமுக சார்பிலான இணை அமைச்சராகவும் ஜெகத்ரட்சகன் பணியாற்றியுள்ளார்.