Home Featured உலகம் துருக்கி: இறுதி நிலவரம் – விமான நிலையம் மீண்டும் திறப்பு!

துருக்கி: இறுதி நிலவரம் – விமான நிலையம் மீண்டும் திறப்பு!

725
0
SHARE
Ad

Tukey-Erdogen-இஸ்தான்புல் – துருக்கி இராணுவப் புரட்சி முறியடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நடப்பு அதிபர் ரிசப் தாயிப் எர்டோகன் (படம்) ஆதரவாளர்கள் துருக்கியின் தெருக்களில் ஆயிரக்கணக்கில் குழுமி உற்சாக முழக்கங்கள் முழங்கி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்த இறுதி நிலவரச் செய்திகள்:

  • துருக்கியின் முக்கிய சுற்றுலா நகரான இஸ்தான்புல்லில் உள்ள அதாதுர்க் அனைத்துலக விமான நிலையம் மூடப்பட்டிருந்ததன் காரணமாக ஆயிரக்கணக்கான பயணிகள் அவதியில் சிக்கியிருக்கின்றனர். இவர்களில் பல மலேசியர்களும் அடங்குவர்.
  • விமான நிலையத்திற்குள் யாரும் நுழையவோ, வெளியேறவோ கூடாது என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து சுமார் 8,000க்கும் மேற்பட்டவர்கள் விமான நிலையத்தினுள் சிக்கிக் கொண்டுள்ளனர்.
  • இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கிடைத்த ஆகக் கடைசியான அறிவிப்பின்படி விமான நிலையம் திறக்கப்பட்டு, ரத்து செய்யப்பட்ட விமானப் பயணங்கள் மெல்ல வழக்கமான நிலைமைக்குத் திரும்பத் தொடங்கியிருக்கின்றன.Turkey-Fethullah Gulen-
  • அமெரிக்காவில் பென்னிஸ்சில்வானியா மாநிலத்தில் வாழும் இஸ்லாமிய மதகுரு ஃபெத்துல்லா குலென் (படம் – Fethullah Gulen) என்பவர்தான் இராணுவப் புரட்சிக்குக் காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ள துருக்கிய அதிபர் எர்டோகன், அவரை உடனடியாக அமெரிக்கா நாடுகடத்தி துருக்கிக்கு அனுப்ப வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
  • ஆனால், இதற்கு மறுப்பளித்துள்ள ஃபெத்துல்லா, தனது அரசியல் எதிரிகளை ஒழித்துக் கொட்ட எர்டோகன் தனக்குத் தானே நடத்திக் கொண்ட நாடகம்தான் இந்த இராணுவப் புரட்சி எனக் கூறியுள்ளார்.

 

#TamilSchoolmychoice

 

 

: