Home Featured இந்தியா இந்தியாவின் பெஸ்வாடா வில்சன், டி.எம்.கிருஷ்ணாவுக்கு ‘மகசேசே’ விருது!

இந்தியாவின் பெஸ்வாடா வில்சன், டி.எம்.கிருஷ்ணாவுக்கு ‘மகசேசே’ விருது!

643
0
SHARE
Ad

TM.Krishnaபுதுடெல்லி – இந்தியாவில் சமூக சேவையில் சிறந்து விளங்கும் பெஸ்வாடா வில்சனுக்கும் இசைத் துறையில் சிறந்து விளங்கும் டி.எம்.கிருஷ்ணாவுக்கும் 2016-ம் ஆண்டிற்கான, பிலிப்பைன்ஸ் நாட்டின் உயரிய விருதான ரமோன் மகசேசே விருது வழங்கப்படுகிறது.

கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த பெஸ்வாடா வில்சன். ‘ மனிதக் கழிவை மனிதனே அகற்றும் முறைக்கு எதிராக சட்டம் கொண்டுவர கடுமையாகப் போராடி வெற்றி கண்டவர். அவருடைய முயற்சியால் இந்தியாவில் மத்திய அரசே அச்சட்டத்தைக் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.