Home Featured நாடு டத்தின் வோங் கொலை: பெண் உட்பட 7 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது!

டத்தின் வோங் கொலை: பெண் உட்பட 7 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது!

717
0
SHARE
Ad

Taman oug shootingகோலாலம்பூர் – தாமான் ஓயுஜியில் தொழிலதிபர் டத்தின் வோங் சியூ லிங் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், பெண் உட்பட 6 பேர் மீது, கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

எம்.பால் கண்பதி (வயது 26), எஸ்.விஜேந்திரன் (வயது 29) ஆகியோருடன் கே.ஸ்ரீகணபதி (வயது 34), சென் யுயென் மிங் (வயது 41), சின் கோக் லியாங் (வயது 43), லியூ லாய் சென் (வயது 46) ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.

நீதிபதி சித்தி ராட்சியா கமாருடின் அவர்கள் மீதான குற்றச்சாட்டை வாசிக்கும் போது, இவர்கள் 6 பேரும் அதனை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

இதனிடையே, இந்த வழக்கில் தொடர்புடைய கே.சத்தியராஜா என்பவர் டிங்கிக் காய்ச்சல் காரணமாக கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், கணபதிக்கு உதவி செய்ததாக அங்கு அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.