முன்னாள் அரசு அதிகாரியான சுல்கிப்ளி, அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அலுவலகத்தில், தேசிய வருவாய் மீட்பு அமலாக்கப் குழுவின் தலைவராகப் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் நடப்பு ஆணையர் டான்ஸ்ரீ அபு காசிம் மொகமட் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதியோடு, பதவி விலகுவதால், அவருக்குப் பதிலாக சுல்கிப்ளி அகமட் நியமிக்கப்பட்டுள்ளார்.
வரும் 2021-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி வரையில், சுல்கிப்ளி இப்பதவியை வகிப்பார் என அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ டாக்டர் அலி ஹம்சா அறிவித்துள்ளார்.
Comments