Home Featured நாடு புதிய மலேசிய பாஸ்போர்ட்டிற்கு 6 மாதங்கள் காத்திருக்க வேண்டும்!

புதிய மலேசிய பாஸ்போர்ட்டிற்கு 6 மாதங்கள் காத்திருக்க வேண்டும்!

785
0
SHARE
Ad

malaysian-passportகோலாலம்பூர் – மலேசியாவில் கடப்பிதழ் (Passport)  புதுப்பிக்கவோ அல்லது புதிதாக விண்ணப்பிக்கவோ விரும்புவர்கள், இனி மணிக்கணக்கில் வரிசையில் நின்று பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கடப்பிதழ் பற்றாக்குறை காரணமாக இந்த நிலை இன்னும் 6 மாதங்களுக்கு இருக்கும் என குடிநுழைவு இலாகா அறிவித்துள்ளது.

கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த புதிய கடப்பிதழை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ள காரணத்தால் தான் இந்த நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக குடிநுழைவு இலாகாவின் பொது இயக்குநர் டத்தோ சாஹிப் குஷ்மி தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“இந்த மாற்றத்தை (புதிய கடப்பிதழ்) ஒரே நாள் இரவில் செய்துவிட முடியாது. புதிய கடப்பிதழ் மிக நேர்த்தியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதற்கு சராசரியாக 6 மாதங்கள் எடுக்கும். ஆகவே குடிநுழைவு இலாகாவும், கடப்பிதழ் தயாரிப்பாளரும் போதுமான கடப்பிதழ்களை விநியோகம் செய்ய இயலும் என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்” என்று சாஹிப் தெரிவித்துள்ளார்.