Home Featured உலகம் செப்டம்பர் 4-இல் அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம்! சுஷ்மா சுவராஜ் பங்கேற்பு!

செப்டம்பர் 4-இல் அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம்! சுஷ்மா சுவராஜ் பங்கேற்பு!

797
0
SHARE
Ad

Mother-Teresa-

வத்திகான் – இந்தியாவில் ஏழை மக்களுக்கு சேவை செய்து, தனது வாழ்க்கையையே அர்ப்பணித்து, அதற்காக நோபல் பரிசும் பெற்ற அன்னை தெரசாவுக்கு போப்பாண்டவர் ‘புனிதர்’ (செயிண்ட்) பட்டம் வழங்கவுள்ளார்.

இந்த நிகழ்ச்சி எதிர்வரும் செப்டம்பர் 4ஆம் தேதி வத்திகானில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பங்கேற்கிறார்.

#TamilSchoolmychoice

அன்னை தெரசா 1997ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி தனது 87வது வயதில் மறைந்தார். 1979ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசையும் அன்னை தெரசா பெற்றுள்ளார்.

அவர் மறைந்து 19 ஆண்டுகள் கழித்து அவருக்கு புனிதர் பட்டம் வழங்கப்படுகின்றது.