Home Featured வணிகம் வாஹிட் ஓமார் பிஎன்பி தலைவராக நியமனம்!

வாஹிட் ஓமார் பிஎன்பி தலைவராக நியமனம்!

707
0
SHARE
Ad

wahidகோலாலம்பூர் – பலரும் எதிர்பார்த்தபடி, பிரதமர் துறையின் முன்னாள் அமைச்சர் டத்தோஸ்ரீ அப்துல் வாஹிட் ஓமார், பெர்மொடலான் நேஷனல் பெர்ஹாட் (பிஎன்பி) என்ற தேசிய முதலீட்டு நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆகஸ்ட் 1 முதல் அவரது நியமனம் நடப்புக்கு வருவதாக பிரதமர் துறை அலுவலகம் வெளியிட்ட பத்திரிக்கை அறிக்கை தெரிவித்தது.

தற்போது நடப்பு பிஎன்பி தலைவராக இருக்கும் முன்னாள் அரசாங்கத் தலைமைச் செயலாளர் துன் அகமட் சார்ஜி அப்துல் ஹாமிட்டுக்குப் பதிலாக வாஹிட் ஓமார் பதவியேற்கின்றார்.