கோலாலம்பூர்: மலேசியாவின் முதல் புதுமையான மைக்ரோ முதலீட்டு கைபேசி பயன்பாடு ராய்ஸை (Raiz) பெர்மோடலான் நேஷனல் பெர்ஹாட் (பிஎன்பி) அறிமுகப்படுத்தியுள்ளது
இதில் மலேசியர்கள் 5 ரிங்கிட்டுக்கு முதலீடு செய்யலாம்.
இன்று பயன்பாட்டின் வெளியீட்டில் பேசிய பிஎன்பி தலைவரும் குழு தலைமை நிர்வாகியுமான அகமட் சுல்கர்னைன் ஓன், ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டிற்கான 60,000- க்கும் மேற்பட்ட பதிவிறக்கங்ளைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும், இந்த பயன்பாட்டில் தற்போது 15,000 பயனர்கள் உள்ளனர் என்றும் கூறினார்.
அகமட் சுல்கர்னைனின் கூற்றுப்படி, அனைத்து மலேசியர்களும் தங்கள் கணக்கில் 5 ரிங்கிட் குறைவாக முதலீடு செய்ய பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்யலாம் என்று கூறினார்.
பிஎன்பி குழுமத் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் செதி அக்தார் அசிஸ், மலேசியர்களை சேமிக்கவும் முதலீடு செய்யவும் ஊக்குவிக்க டிஜிட்டல் அனுபவத்தை மேம்படுத்தும் மற்றொரு முயற்சி இது என்று தனது தொடக்க உரையில் கூறினார்.