Home One Line P1 ‘சுகர் புக்’ தோற்றுநர் மீண்டும் கைது! விபச்சாரம், பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டுகள்!

‘சுகர் புக்’ தோற்றுநர் மீண்டும் கைது! விபச்சாரம், பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டுகள்!

641
0
SHARE
Ad

ஷா ஆலாம் : சர்ச்சைக்குரிய சுகர் புக் தளத்தின் தோற்றுநர் இன்று ஷா ஆலாம் நீதிமன்றத்தால் தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் கைது  செய்யப்பட்டார்.

இந்த முறை பல்கலைக் கழக மாணவி ஒருவர் பாலியல் வல்லுறவு, விபச்சாரம் தொடர்பிலான காவல் துறை புகார் செய்திருப்பதைத் தொடர்ந்து சுகர் புக் தோற்றுநர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

நேற்று கோலாலம்பூரில் கைது செய்யப்பட்ட அவரைத் தடுப்புக் காவலில் வைக்க காவல் துறை செய்திருந்த விண்ணப்பத்தை இன்று ஷா ஆலாம் நீதிமன்றம் நிராகரித்தது. விசாரணைக்கு சுகர் புக் தோற்றுநர் தனது முழு ஒத்துழைப்பை வழங்க ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து நீதிமன்றம் காவல் துறையின் விண்ணப்பத்தை நிராகரித்தது.

#TamilSchoolmychoice

நீதிபதி நோராஷிகின் சாஹாட் விண்ணப்பத்தை தள்ளுபடி செய்ததாக சுகர் புக் தோற்றுநரின் வழக்கறிஞர் பூங் செங் லியோங் தெரிவித்தார்.

இந்த முடிவை எதிர்த்து காவல் துறை சார்பில் அரசு வழக்கறிஞர் செய்திருக்கும் மேல் முறையீடு எதிர்வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்.