பெய்ஜிங்: சீனா செங்டுவில் உள்ள அமெரிக்க தூதரகத்தை மூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹூஸ்டனில் செவ்வாய்க்கிழமை இரவு சீன தூதரகம் மூடப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, நேற்று, வுஹானில் உள்ள அமெரிக்க தூதரகத்தை மூட சீன எண்ணம் கொண்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்திருந்தது. ஆயினும், அந்த நடவடிக்கை சமீபத்திய கருத்து வேறுபாடுகள் காரணமாக இல்லை என்று சீன தரப்புத் தெரிவித்துள்ளது.
கொவிட்-19 பாதிப்புக் காரணமாக அமெரிக்கா தமது பணியாளர்களை திரும்பப் பெற்றுக் கொண்டதன் காரணமாக அந்த நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
செங்டுவில் உள்ள தூதரகம் மூடப்பட்டால் இரு நாடுகளுக்குமிடையிலான உறவு மேலும் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த வார இறுதியில் ஹூஸ்டனில் உள்ள தூதரக வளாகங்களை விட்டு வெளியேறுமாறு அமெரிக்க அரசு சீனாவுக்கு உத்தரவிட்டுள்ளது. சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் வாஷிங்டனை இந்த முடிவை இரத்து செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.