Home One Line P1 2020-இல் பிறக்கும் குழந்தை நீண்ட காலம் உயிர் வாழும்

2020-இல் பிறக்கும் குழந்தை நீண்ட காலம் உயிர் வாழும்

835
0
SHARE
Ad

புத்ராஜெயா: 2014- ஆம் ஆண்டில் மலேசியாவில் மனிதனின் ஆயுட்காலம் 74.5 ஆண்டுகளாகக் கணக்கிடப்பட்டது. இந்த ஆண்டு பிறந்த ஒரு குழந்தை 74.9 ஆண்டுகள் வரை நீண்ட காலம் வாழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புள்ளிவிவரத் துறை நேற்று வெளியிட்ட 2018- 2020- ஆம் ஆண்டுக்கான ஆயுள் அட்டவணையை அடிப்படையாகக் கொண்டு இந்த கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் வயது, இனக்குழு மற்றும் பாலின அடிப்படையில் வாழ்க்கை அட்டவணைகள் உள்ளன.

#TamilSchoolmychoice

தலைமை புள்ளிவிவர நிபுணர் டத்தோஸ்ரீ டாக்டர் முகமட் உசிர் மைடின் கூறுகையில், சராசரியாக, 2020- ஆம் ஆண்டில் புதிதாகப் பிறந்த ஒரு பெண் குழந்தை 77.6 வயது வரை வாழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு ஆண் குழந்தையை விட ஐந்து ஆண்டுகள் நீண்டது (72.6 வயது) என்று கூறினார்.

“2020- ஆம் ஆண்டில், 15 வயதை எட்டும் ஆண்களும், பெண்களும் முறையே 58.4 மற்றும் 63.2 ஆண்டுகள் வாழ்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.

60 வயதில் ஆயுட்காலம் அதிகரித்துள்ளது. இந்த வயதை எட்டும் ஆண்கள் மேலும் 18.4 ஆண்டுகள் மற்றும் பெண்கள், மேலும் 21.2 ஆண்டுகள் வாழ்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிக ஆண் ஆயுட்காலம் கொண்ட மூன்று மாநிலங்களில் சரவாக் (74.6 ஆண்டுகள்), கோலாலம்பூர் (74.5 வயது) மற்றும் சிலாங்கூர் (73.8 ஆண்டுகள்) அடங்கியுள்ளது. அதிக பெண் ஆயுட்காலம் கொண்ட மூன்று மாநிலங்கள் கோலாலம்பூரில் (79.4 ஆண்டுகள்) உள்ளன. பினாங்கு (78.9 வயது), சரவாக் (78.4 வயது) ஆக பதிவு செய்துள்ளனர.