Home One Line P1 மகாராஷ்டிராவில் 10 குழந்தைகள் தீயில் சிக்கி மாண்டனர்

மகாராஷ்டிராவில் 10 குழந்தைகள் தீயில் சிக்கி மாண்டனர்

664
0
SHARE
Ad

புது டில்லி: மகாராஷ்டிராவில் உள்ள ஒரு மருத்துவமனையில் இன்று (ஜனவரி 9) அதிகாலை 2 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து, அங்குள்ள 10 குழந்தைகள் தீயில் சிக்கினர்.

குழந்தைகள் பாதுகாப்பு சிறப்பு சிகிச்சை பிரிவில் தீப்பற்றியதால் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. அங்கு பிறந்த ஒரு மாதம் முதல் மூன்று மாதங்கள் வரையிலான குழந்தைகள் வைக்கப்பட்டிருந்தனர்.

சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், குழந்தைகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், 7 குழந்தைகள் மட்டுமே பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

#TamilSchoolmychoice

10 குழந்தைகள் இறந்ததை அடுத்து, இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.