Home One Line P1 பகாங் வெள்ளம்: முக்கிய நகரங்கள் மூழ்கின

பகாங் வெள்ளம்: முக்கிய நகரங்கள் மூழ்கின

990
0
SHARE
Ad

குவாந்தான்: பகாங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்கள் வான்வழி பார்வையில், ‘தேநீர்’ போன்று காட்சியளிக்கிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ளத்தில் பெரும்பாலான குடியிருப்புகள் மூழ்கியுள்ளன. கட்டிட கூரைகளுக்கு மேலே தண்ணீர் உயர்ந்துள்ளது.

பெர்னாமா, மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் விமானப் பிரிவுடன் சேர்ந்து, வெள்ள நிலைமை குறித்து வான்வழி ஆய்வு மேற்கொண்டபோது, ​​மாநிலத்தின் பல முக்கிய நகரங்கள் இருண்ட மஞ்சள்-பழுப்பு நிற நீரால் மூடப்பட்டிருப்பதைக் கண்டது.

#TamilSchoolmychoice

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டுபிடிப்பது நிலைமை தனது குழுவுக்கு ஒரு சவாலாக அமைந்ததாக மீட்புத் துறையின் விமானப் பிரிவின் விமானி சோபியன் அகமட் கூறினார்.

“நாங்கள் சுற்றுப்புறங்களில் கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால் பாதிக்கப்பட்டவர்கள் பொதுவாக உயர்ந்த, பாதுகாப்பான இடத்தில் இருப்பார்கள். பாதிக்கப்பட்டவர்களை நாங்கள் கண்டறிந்ததும், நாங்கள் கட்டுப்பாட்டு மையத்திற்கு அறிவிப்போம். பின்னர் பாதிக்கப்பட்டவர்களை படகில் அழைத்துச் செல்லுமாறு தரையில் உள்ள குழுக்களுக்கு அறிவுறுத்துவோம்,” என்று அவர் கூறினார்.

நேற்றிரவு நிலவரப்படி, ஒன்பது மாவட்டங்களில் 284 வெள்ள வெளியேற்ற மையங்களில் 26,075 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.