Home One Line P1 சபாவைச் சேர்ந்த 2 தலைவர்கள் தேசிய கூட்டணியின் துணைத் தலைவர்களாக நியமனம்

சபாவைச் சேர்ந்த 2 தலைவர்கள் தேசிய கூட்டணியின் துணைத் தலைவர்களாக நியமனம்

533
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசின் தலைமையிலான தேசிய கூட்டணி இரண்டு சபா தலைவர்களை, துணைத் தலைவர்களாக நியமித்துள்ளது.

ஸ்டார் தலைவர் ஜெப்ரி கித்திங்கான் மற்றும் சபா முற்போக்கு கட்சி (எஸ்ஏபிபி) தலைவர் யோங் டெக் லீ ஆகியோரை கூட்டணியின் துணைத் தலைவராக அது நியமித்துள்ளது.

பெரிட்டா ஹரியான் அறிக்கையின்படி, இரண்டு சபா அரசியல் கட்சித் தலைவர்களும் அகமட் பைசால் அசுமு மற்றும் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் ஆகியோருடன் கூட்டணியின் துணைத் தலைவராக இணைவார்கள்.

#TamilSchoolmychoice

ஸ்டார் கட்சியின் பொதுச் செயலாளர் குவாண்டி கோஹோய் மற்றும் எஸ்ஏபிபி துணைத் தலைவர் எட்வர்ட் டாகுல் ஆகியோரும் தேசிய கூட்டணியின் உச்சமன்றக் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

சபா தேசிய முன்னணிக்கு தலைமை தாங்கும், சபா முதலமைச்சர் ஹாஜிஜி நூர், இந்த நியமனங்களுக்கு மொகிதினுக்கு நன்றி தெரிவித்தார்.

“இந்த நியமனம் மாநில மட்டத்தில் கட்சியின் அமைப்பையும், பணியையும் அடிமட்ட மட்டத்திற்கு உருவாக்கி பலப்படுத்துவதற்கான சிறந்த நம்பிக்கையாகும். சபா மக்கள் கூட்டணியில் (ஜிஆர்எஸ்) ஒரு வலுவான ஒப்பந்தத்தை உருவாக்குவதற்காக தேசிய கூட்டணி, தேசிய முன்னணி மற்றும் பார்ட்டி பெர்சாட்டு சபா (பிபிஎஸ்) இடையேயான ஒத்துழைப்பை நாங்கள் பலப்படுத்துகிறோம். இதனால் ஜிஆர்எஸ் அரசாங்கத்தின் நம்பிக்கையை நிறைவேற்றுவதிலும், மக்களுக்கு அதன் பொறுப்புகளை நிறைவேற்றுவதிலும் பலப்படுத்துகிறது,” என்று அவர் கூறினார்.

கடந்த ஆண்டு சபா மாநிலத் தேர்தலுக்கு முன்னதாக தேசிய கூட்டணி அதிகாரப்பூர்வமாக சங்கப் பதிவாளரால் பதிவு செய்யப்பட்டது. பெர்சாத்து , பாஸ், ஸ்டார் மற்றும் எஸ்ஏபிபி ஆகியவற்றை மட்டுமே கொண்டிருந்தது.