Home One Line P2 அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவில் டிரம்ப் கலந்து கொள்ளவில்லை

அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவில் டிரம்ப் கலந்து கொள்ளவில்லை

573
0
SHARE
Ad

வாஷிங்டன்: வருகிற 20-ஆம் தேதி நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் பதவி ஏற்பு விழாவில் டொனால்டு டிரம்ப் கலந்து கொள்ளப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

“என்னிடம் கேள்வி கேட்டவர்கள் அனைவரிடமும் தெரிவித்துக்கொள்கிறேன். ஜனவரி 20-ஆம் தேதி பதவியேற்பு விழாவில் நான் பங்கேற்கப்போவதில்லை,” என்று அவர் தெரிவித்துள்ளார். அதன்பிறகு, அவரது டுவிட்டர் பக்கம் டுவிட்டர் நிறுவனத்தால் முடக்கப்பட்டது.

அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றதை அடுத்து ஜனநாயக கட்சி வேட்பாளரும், முன்னாள் துணை அதிபருமான ஜோ பைடன் வெற்றிபெற்றார். இதில் நடப்பு அதிபர் டொனால்டு டிரம்ப் தமது தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் தொடர்ந்து வாதத்தில் ஈடுபட்டு வருகிறார்.

#TamilSchoolmychoice

தேர்தலில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றுள்ளதாக டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். தேர்தல் முடிவை எதிர்த்து டிரம்ப் தரப்பில் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகளும் தொடர்ந்திருந்தார். அனைத்து வழக்குகளையும் நீதிமன்றங்கள் இரத்து செய்தன.

இதைத்தொடர்ந்து, அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்றுவிட்டதாக அமெரிக்க நாடாளுமன்றம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது.

ஜனவரி 20-ஆம் தேதியன்று ஆட்சி மாற்றம் நடைபெற உள்ளது. அத்தேதியில், ஜோ பைடன் அதிபராக பதவியேற்க இருக்கிறார். துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்கவிருக்கிறார்.