Home One Line P2 ஆஸ்ட்ரோ : ஜனவரி 17 வரையிலான நிகழ்ச்சிகளின் சில சிறப்பம்சங்கள்

ஆஸ்ட்ரோ : ஜனவரி 17 வரையிலான நிகழ்ச்சிகளின் சில சிறப்பம்சங்கள்

551
0
SHARE
Ad

கோலாலம்பூர் : எதிர்வரும் ஜனவரி 11-ஆம் தேதி தொடங்கி, 17-ஆம் தேதி வரை ஆஸ்ட்ரோ தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒளியேறவிருக்கும் சில நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்களை இங்கே காணலாம்:

இசைப் புயல் ஏ. ஆர். ரகுமானின் சிறப்புத் திரைப்படங்கள்

எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

இசை மேஸ்ட்ரோ, ஏ. ஆர். ரகுமானின் இரசிகர்கள் அவரின் விருது வென்ற பிரபலமானத் திரைப்படங்களான பாபா, ராவணன், ஓ காதல் கண்மணி, சர்வம் தாளமயம், ஜென்டில்மேன், கருத்தம்மா, காதல் தேசம், சங்கமம், காவியத்தலைவன், படையப்பா, சிவாஜி, உயிரே, காற்று வெளியிடை, செக்கச் சிவந்த வானம் போன்றவற்றை பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்யலாம்.

திங்கள், 11 ஜனவரி

#TamilSchoolmychoice

சீரியல் பேய் (புதிய அத்தியாயங்கள் – 6-10)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 9 மணி, திங்கள்-வெள்ளி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்)செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: ‘புன்னகைப் பூ’ கீதா, ஜேம்ஸ் தேவன், சசி குமார், கவிமாறன், ரேவதி, நவீஷா, அக்ஷ்ரா நாயர், கோகுலன், சுரேஷ் & ராஜ் கணேஷ்

கீதாவும் கேஷாவும் கைவிடப்பட்டப் பேரங்காடிக்குச் சென்று புகார் செய்யப்பட்ட வழக்குகளைப் பற்றி மேலும் ஆராய்கின்றனர். அப்பொழுது, கீதா கைவிடப்பட்ட மற்றும் பழுதடைந்தக் காரொன்றில் நடைபெறும் மற்றொரு அமானுஷ்ய நடவடிக்கையைக் காண்கிறார்.

மூன்றாவது கண் (புதிய அத்தியாயங்கள் – 19-22)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 7.30 மணி, திங்கள்-வெள்ளி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

ரூபாவை ஒரு தனியார் விருந்துக்கு அழைப்பதன் வழி ரணா முரண்பாடாக நடந்துக் கொள்கிறார். நேஹா ரணாவின் அலுவலகத்திற்கு வருகிறாள்.

யார்? (புதிய அத்தியாயங்கள் – 28-31)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 8 மணி, திங்கள்-வெள்ளி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

தரணியின் காதலன், ரூபன் மற்றொரு சந்தேக நபரை நோக்கி விசாரணைக் குழுவை வழிநடத்துகிறான். அர்ஜுனும் ஷமீனும் தரணியின் முதலாளியைப் பற்றிய  சந்தேகத்திற்கிடமான ஒன்றைக் கண்டுப்பிடிக்கின்றனர்.

வியாழன், 14 ஜனவரி

ஹே ராம் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

கமல் ஹாசன் (அலைவரிசை 242), இரவு 9 மணி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்
நடிகர்கள்: கமல் ஹாசன் & ஷாருக்கான்

கல்கத்தாவில் நடந்த கலவரத்தின்போது சகீத் ராமின் மனைவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்படுகிறார். நாட்டில் நடக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் மகாத்மா காந்தியே பொறுப்பு என்று அவர் உறுதியாக நம்புகையில், அவரைக் கொலைச் செய்ய முற்படுகிறார்.

பூட்பேய்ரி (Footfairy) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

BollyOne HD (அலைவரிசை 251), இரவு 9 மணி |ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: குல்ஷன் தேவையா, சகரிகா காட்ஜ் & குணால் ராய் கபூர்

கனவுகளின் நகரம் மற்றும் வாய்ப்புகளின் நிலமான மும்பையை மையமாகக் கொண்டக் கதை. ஒரு தொடர் கொலையாளிக்கும் குல்ஷன் என்ற ஒரு தனித்துவமான சிபிஐ அதிகாரிக்கும் இடையிலான ஒரு சுவாரசியமான மோதலை இவ்வுளவியல் குற்றவியல் த்ரில்லர் திரைப்படம் சித்தரிக்கின்றது. தொடர் கொலையாளியின் பார்வையில், தப்பி ஓடியவரின் தற்காலிக இன்பத்திற்கான இருண்ட விருப்பத்தை இத்திரைப்படம் ஆராய்கிறது.

வெள்ளி, 15 ஜனவரி

கோட்டா (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ தங்கத்திரை எச்டி (அலைவரிசை 241), இரவு 9 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: ஆதில், பவாஸ் & செல்லா

சமூகத்தில் இன்னும் ஒரு கேள்வியாக இருக்கும் ஏழைக் குடும்பங்களின் குழந்தைகளை மையமாகக் கொண்டக் கதை.

சனி, 16 ஜனவரி

இம்திஹான் (Imtihan) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116), இரவு 10.30 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

நடிகர்கள்: சன்னி தியோல், சைஃப் அலி கான் & ரவீனா தண்டோன்

ஒரு பிரபல பாடகரான விக்கி, ப்ரீத்தியின்பால் காதல் வயப்படுகிறார். அவரின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளாவிட்டாலும் அவரை திருமணம் செய்துக் கொள்ள ஒப்புக்கொள்கிறார், ப்ரீத்தி. ப்ரீத்தி தனது கடந்தக் கால உண்மைகளை மறைப்பதை அவர் விரைவில் அறிந்துக் கொள்கிறார்.

பிறவி சித்தம் (புதிய அத்தியாயம் – 6)

ஆஸ்ட்ரோ வானவில் எச்டியில் (அலைவரிசை 201), இரவு 9 மணி மணி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

தொகுப்பாளர்:அருசெல்வன் செல்வசாமி

இந்து மதத்தின் விசித்திரமான மற்றும் ஆன்மீக அம்சங்களைக் கொண்ட, குறிப்பாக உள்ளூர் சித்தர்களைச் சித்தரிக்கும் புதிய உள்ளூர் தமிழ் ஆவணப்படம். பாரம்பரிய மருத்துவத்தின் நன்மைகள், யோகாசனம், சுவாசப் பயிற்சிகள், சைவ உணவு முறைகள் மற்றும் அதன் நன்மைகள், மற்றும் ‘ஜீவ சமாதி’ அல்லது ‘முக்தி நிலையைக்’ கொண்ட எட்டுத் தளங்கள் ஆகியவை இந்த ஆவணப்படத்தில் இடம்பெறும்.

அவை யாதெனில், பேராக்கில் அமைந்துள்ள ஸ்ரீ ஜெகநாதர் சிவாலய ஆசிரமம் மற்றும் காசிவாசி கண்டைய சுவாமி சமாதி; பினாங்கில் அமைந்துள்ள சித்தர் பழனிசாமி தியான மையம், பிரம்ம ஸ்ரீ சுவாமி சரஹன பவனந்த சமாதி, ஸ்ரீ ரங்கநாத சுவாமி மடாலயம் மற்றும் கந்தசாமி கோயில்; மற்றும் கெடாவில் அமைந்துள்ள ஸ்ரீ சிவபித்து குருமாதா (அம்மா) மற்றும் சுவாமி சந்தானந்த சித்தர்.

ஞாயிறு, 17 ஜனவரி

சமையல் சிங்காரி (புதிய அத்தியாயம் – 10)

சாந்தி ராஜ்

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 9 மணி, ஞாயிறு | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

சமையல் நிபுணர்: சாந்தி ராஜ்
தொகுப்பாளர்: விக்கி ராவ்

உள்ளூர் சமையல் நிபுணரான சாந்தி ராஜ் உடன் பலவகையான சுவையான சமையல்களைக் காண்பிக்கும் சமையல் நிகழ்ச்சியான சமையல் சிங்காரி நிகழ்ச்சியை வாடிக்கையாளர்கள் கண்டு இரசிக்கலாம்.

விக்கி ராவ் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க டேனேஸ் குமார், மகேன் விகடகவி, ஷீசே, பாஷினி சிவகுமார், ஹேமாஜி, ராகாவைச் சேர்ந்த அஹிலா மற்றும் உதயா, யாஸ்மின் நடியா, குபேன் மகாதேவன், சுபாஷினி அசோகன், சாந்தினி பி சுபாஷ் சந்திர போஸ், தேவகுரு சுப்பையா மற்றும் மகேஸ்வரி கண்ணசாமி (மாலா அம்லு) ஆகிய உள்ளூர் பிரபலங்கள் இடம் பெறுவர்.

இந்நிகழ்ச்சி வாடிக்கையாளர்களை மகிழ்விப்பதோடு மட்டுமல்லாமல் ஆரோக்கியமான உணவு முறை பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தும். அதே நேரத்தில் அழிந்துபோகக்கூடிய பொருட்களிலிருந்து அழகுக் குறிப்புகளை உருவாக்குதல், சமையலறையில் உடற்பயிற்சிகளுக்கான யோசனைகள் போன்ற வாழ்க்கை முறை குறிப்புகளும் இந்நிகழ்ச்சியில் பகிரப்படும்.