Home One Line P1 மூன்று வயது மலேசிய மேதை குழந்தை: மென்சா இங்கிலாந்து உறுப்பினராகிறார்!

மூன்று வயது மலேசிய மேதை குழந்தை: மென்சா இங்கிலாந்து உறுப்பினராகிறார்!

1329
0
SHARE
Ad
படம்: ஹாரிஸ் நாட்ஸிம் முகமட் ஹில்மி நாயிம்

பிரிட்டன்: பிரிட்டனில் வசிக்கும் மூன்று வயது மலேசியக் குழந்தை, அனைத்துலக உயர் ஐக்யூ சமூக சங்கமான மென்சா இங்கிலாந்தில் (Mensa UK) இணையும் இளைய உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதன் மூலமாக அக்குழந்தை புதிய வரலாறு படைத்துள்ளார்.

குழந்தை, ஹாரிஸ் நாட்ஸிம் முகமட் ஹில்மி நாயிம், ஸ்டான்போர்ட் பினெட் (Stanford Binet) சோதனையின் மூலம் 142 நுண்ணறிவு (ஐக்யூ) மதிப்பெண் பெற்ற பின்னர் இச்சங்கத்தில் அனுமதிக்கப்பட்டார்.

#TamilSchoolmychoice

உலகெங்கிலும் உள்ள மேதை குழந்தைகளின் மதிப்பெண்கள் 0.3 விழுக்காடு என்று மெட்ரோ யுகே தெரிவித்துள்ளது.

ஹாரிஸின் பெற்றோர்களான அனிரா அசிகின் மற்றும் முகமட் ஹில்மி நாயிம் இருவரும் பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றவர்கள். தங்கள் மகனுக்கு அசாதாரணமான நுண்ணறிவு இருப்பதாக ஒருபோதும் நினைத்ததில்லை என்று தெரிவித்துள்ளனர்.

நாங்கள் அவரை ஒரு தினப்பராமரிப்பு மையத்திற்கு அனுப்பியபோது, ​​மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடும்போது எங்கள் குழந்தை அசாதாரண திறன்களைக் காட்டியதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.”

ஹாரிஸ் தனது எல்லா புத்தகங்களையும் சரளமாக படிக்க முடியும் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது,” என்று அவரது தாயார் கூறினார்.

இந்ததிறனைஉணர்ந்தஹாரிஸை,பின்னர்லின்கெண்டல்என்றஉளவியலாளரிடம்அழைத்துச் சென்றதாக அவர் கூறினார்.

அவர் திறமையான குழந்தைகளின் திறனைக் கண்டறிவதில் நிபுணத்துவம் பெற்றவர்.”

தனது மகனின் உண்மையான திறனை அடைய ஆதரவளிக்க விரும்புவதாக அனிரா விளக்கினார்.

எங்கள் குழந்தை அவரது முழு திறனை அடைந்து, அவர் ஈடுபடும் துறையில் தொடர்ந்து வளர்ச்சியை வழங்குவார் என்று நாங்கள் நம்புகிறோம்.”

அதே நேரத்தில், அவர் மீது அதிக சுமையை வைக்க நாங்கள் விரும்பவில்லை. மற்ற சாதாரண குழந்தைகளைப் போல வளர்ந்து வரும் அனுபவத்தை அவர் அனுபவிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்என்று அனிரா கூறினார்.

மற்ற குழந்தைகளுக்கு ஊக்கமளிப்பற்காக, ஹாரிஸுக்கு இரண்டு வயதாக இருந்தபோது, ​​அவரும் அவரது கணவரும்லிட்டில் ஹாரிஸ்’ என்ற யூடியூப் அலைவரிசையைத் திறந்ததாக அனிரா கூறினார்.

அவர் மற்ற மூன்று வயது குழந்தைகளைப் போலவே இருக்கிறார். அவர் விளையாடுவதற்கும், வரைவதற்கும், பாடுவதற்கும் விரும்புகிறார், ”என்று அவரது தாயார் விளக்குகினார்.

உண்மையில், அனிரா தனது மகனும் ஸ்டோரி போட்ஸ் (Story Bots) மற்றும் நம்பர் பிளாக்ஸ் (Numberblocks) போன்ற குழந்தைகள் நிகழ்ச்சிகளைப் பார்க்க விரும்புகிறார் என்று கூறினார்.

தனது மகனுக்கு கேள்விகளைக் கேட்பதும், இடத்தைப் பற்றி பேசுவதும், புத்தகங்களைப் படிப்பதும் பிடிக்கும் என்று அனிரா மேலும் கூறினார்.