Home One Line P1 2018-ஆம் ஆண்டைக் காட்டிலும் கடந்த ஆண்டில் குற்றச் செயல் பதிவுகள் 7.5 விழுக்காடு சரிவு!- காவல்...

2018-ஆம் ஆண்டைக் காட்டிலும் கடந்த ஆண்டில் குற்றச் செயல் பதிவுகள் 7.5 விழுக்காடு சரிவு!- காவல் துறை

857
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கடந்த ஆண்டு குறிப்பிடத்தக்க சாதனைகளை மலேசிய காவல் துறை பதிவு செய்துள்ளதாக காவல் துறைத் தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்தார்.

இது கடந்த 2018-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது குற்ற விகிதங்களைக் குறைப்பது உட்பட பல்வேறு வெற்றிகளைப் பதிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சிறந்த சாதனையாக குற்றக் குறியீட்டை 100,000 பேருக்கு 249 வழக்குகளாக குறைந்ததை அவர் சுட்டிக் காட்டினார். இது 7.5 விழுக்காடு சரிவு என்று அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

வணிக குற்றவியல் புலனாய்வுத் துறையை (ஜேஎஸ்ஜேகே) பொறுத்தவரை, 17,582 நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், பல்வேறு குற்றங்களுக்காக 15,876 பேர் கைது செய்யப்பட்டனர்.”

“26,465 விசாரணைக் கட்டுரைகளில் மொத்தம் 21,016 பூர்த்தி செய்யப்பட்டுள்ளனஎன்று அவர் இன்று வியாழக்கிழமை ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஜேஎஸ்ஜேகே புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஆண்டில் 79 விழுக்காடு வழக்குகள் வெற்றிகரமாக தீர்க்கப்பட்டுள்ளன என்பதை அப்துல் ஹாமிட் மேலும் கூறினார்.

போதைப்பொருள் பிரச்சனைகள் குறித்து கூறுகையில், போதைப்பொருள் குற்றவியல் புலனாய்வுத் துறை (ஜேஎஸ்ஜேஎன்) 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் 10-ஆம் தேதியன்று பினாங்கில் 12 டன் அல்லது 2.4 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள கோகேயினை பறிமுதல் செய்ததை அவர் குறிப்பிட்டார்.

காவல் துறை உறுப்பினர்களிடமிருந்தும் போதைப்பொருளை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

268  காவல் துறை அதிகாரிகள் ஆபத்தான மருந்துகள் சட்டம் 1962-இன் கீழ் கடந்த ஆண்டில் ப்ளூ ஈவில் நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்டதை அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் 17 வரை, சிறுநீர் பரிசோதனையில், சுமார் ஒன்பது காவல் துறையினர் கைது செய்யப்பட்டுள்ளதை அவர் வெளியிட்டார்.

காவல் துறையின் மரியாதையைக் காப்பாற்றுவதில், காவல் துறையினரிடையே போதைப்பொருள் பிரச்சனையை தீர்வு காண முடியும் என்று நம்பப்படுகிறது,” என்று அவர் கூறினார்.