சென்னை – “தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்” – இந்த வாசகத்தை ஒருநாளில், குறைந்தது ஒன்றிரண்டு முறையாவது எங்காவது கேட்டுவிடுகின்றோம்.
ஆனால் எவ்வளவு தான் காது ஆர்வமாகக் கேட்டாலும், நாம் சொல்வதை உடல் கேட்பதில்லை.
அதையே, நமக்குப் பிடித்த நடிகரோ, நடிகையோ, 50 வயதைத் தாண்டியும் இன்னும் அதே கட்டுக்கோப்பான உடல் அமைப்போடும், இளமையோடு இருப்பவர் சொல்லும் போது, அது வேறு மாதிரியான புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது அல்லவா?
அந்த வகையில், 53 வயதைத் தொட்டுவிட்ட நடிகர் அர்ஜூன், இன்னும் அதே இளமையோடும், கட்டுடலோடும் இருப்பதன் இரகசியம் பற்றி ஆனந்த விகடனிடம் பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது:-
“எக்ஸர்சைஸ். அதுக்கு ஒருநாளும் பிரேக் விட்டது இல்லை. முதல் விஷயம் சினிமாவுக்காக நான் இதைப் பண்ணலை. எனக்காகப் பண்றேன். திடீர்னு ஒருநாள் கண்ணாடியில இடுப்புப் பக்கம் லேசா சதை தெரிஞ்சதுனா, பகீர்னு ஆகிடும். மறுபடி அதுக்காக ஓடி, வொர்க்அட் பண்ணி அதைக் குறைச்சாத்தான் நிம்மதியா இருக்கும். நான் என்னை எப்பவுமே வீக்கான ஆளா பார்க்க விரும்ப மாட்டேன்.”
“உடம்பை நல்லா வெச்சுக்கிறதை உங்க வாழ்க்கையின் ஒரு பகுதியா ஆக்குங்க. ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் உடலுக்காகச் செலவு செஞ்சா, மீதம் இருக்கும் 23 மணி நேரம் நிம்மதியா இருக்கலாம்.” என்று தெரிவித்துள்ளார்.
தற்போது தனது மூத்த மகள் ஐஸ்வர்யாவை நடிக்க வைத்து, `காதலின் பொன்வீதியில்’ என்ற திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் அர்ஜுன் என்பது குறிப்பிடத்தக்கது.