Home Featured உலகம் ராஜ்நாத் சிங் பாகிஸ்தான் சென்றடைந்தார்!

ராஜ்நாத் சிங் பாகிஸ்தான் சென்றடைந்தார்!

535
0
SHARE
Ad

Rajnath,இஸ்லாமாபாத் – இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று காலை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் சென்றடைந்துள்ளார். அங்கு நடைபெறும் தெற்கு ஆசிய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் இஸ்லாமாபாத் சென்றுள்ளார்.

இந்தியாவில் பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட பாகிஸ்தான் அரசாங்கம், மற்றும் இராணுவத்தின் ஒத்துழைப்புடன் சில பயங்கரவாத இயக்கங்கள் செயல்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகள் வலுத்து வரும் வேளையில், ராஜ்நாத் சிங் பாகிஸ்தான் சென்றுள்ளார்.

அங்கு அவர் பாகிஸ்தான் உள்துறை அமைச்சருடனும், பாகிஸ்தான் பிரதமருடனும் சந்திப்பு நடத்தும்போது, பாகிஸ்தானில் இயங்கும் பயங்கரவாதக் குழுக்கள் தொடர்பான சில இரகசியங்களை பரிமாறிக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

#TamilSchoolmychoice