Home Featured உலகம் எமிரேட்ஸ் விபத்து: விமானத்தில் இரண்டு மலேசியர்கள் இருந்தது உறுதியானது!

எமிரேட்ஸ் விபத்து: விமானத்தில் இரண்டு மலேசியர்கள் இருந்தது உறுதியானது!

777
0
SHARE
Ad

Emirates-dubai-crash land-3 aug 2016கோலாலம்பூர் – நேற்று புதன்கிழமை துபாய் அனைத்துலக விமான நிலையத்தில், தரையிறங்கும் போது தீப்பற்றிய எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் இரண்டு மலேசியர்கள் இருந்தது உறுதியாகியுள்ளது.

இத்தகவலை விஸ்மா புத்ரா இன்று வியாழக்கிழமை உறுதி செய்துள்ளது.

“விமானத்தில் இருந்த 282 பயணிகள் மற்றும் 18 பணியாளர்கள் பாதுகாப்பாக இருப்பதை விமான நிலைய அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி, இரண்டு மலேசியர்கள் விமானத்தில் இருந்தது உறுதியாகியுள்ளது. அவர்கள் இன்னும் அவசரகால பதில் அறையில் இருப்பதால், தொடர்பு கொள்ள முடியவில்லை.”

#TamilSchoolmychoice

“துபாயில் உள்ள துணைத் தூதரகம் உள்ளூர் அதிகாரிகளுடன் தக்க ஒத்துழைப்பு அளித்து வருகின்றது” என விஸ்மா புத்ரா இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.