Home உலகம் சரவணனுக்கு துபாய் மாநாட்டில் ‘உலகத் தமிழர் மாமணி’ விருது

சரவணனுக்கு துபாய் மாநாட்டில் ‘உலகத் தமிழர் மாமணி’ விருது

878
0
SHARE
Ad

9 ஆவது உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டில் மஇகா தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் உலகத் தமிழர் மாமணி விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டார்.

உலகத் தமிழர் பொருளாதார மூன்று நாள் மாநாடு மார்ச் 18/19, 20 ஆகிய தினங்களில் துபாயில் நடைபெற்றது. அதில்
டத்தோஸ்ரீ எம்.சரவணன் உலகத் தமிழர் மாமணி எனும் பன்னாட்டு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

சமுதாய மேம்பாட்டிற்கு சிறப்பான பங்களிப்பை ஆற்றியதற்காகவும், தமிழ் தொண்டுக்கும், உலகத் தமிழர் பொருளாதார நலனுக்கும் அனைத்துலக அரங்கில் அங்கீகாரம் வழங்கும் தனித்துவம் மிக்க விருதான இது, சான்றோர் முன்னிலையில் டத்தோஸ்ரீ எம்.சரவணனுக்கு வழங்கப்பட்டது.

#TamilSchoolmychoice

தமிழ்நாட்டு நீர் வளத் துறை அமைச்சர் துரைமுருகன் மாநாட்டுக்கு தலைமையேற்று அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.

பல்வேறு நாடுகளை சேர்ந்த நிபுணர்கள் கட்டுரை படைத்தனர்.

டத்தோஸ்ரீ எம்.சரவணன் மலேசியாவைப் பிரதிநிதித்து, எதிர்கால பொருளாதார சிந்தனைகளும் சவால்களும் என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை படைத்தார்.

உலக நாடுகளில் இருந்து பொருளாதார நிபுணர்கள் வர்த்தகர்கள், தமிழ் அறிஞர்கள் சுமார் 800 பேர் இந்த மாநாட்டில் கலந்து சிறப்பித்தனர்.