Home நாடு இராமசாமி மீண்டும் போட்டியிட வாய்ப்பில்லையா? மறுக்கிறார் அந்தோணி லோக்!

இராமசாமி மீண்டும் போட்டியிட வாய்ப்பில்லையா? மறுக்கிறார் அந்தோணி லோக்!

623
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன் : பினாங்கு மாநில துணை முதல்வரும், பிறை சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் பி.இராமசாமிக்கு எதிர்வரும் பினாங்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாது என்ற ஆரூடங்கள் பரவி வருகின்றன. இந்த ஆரூடங்களை ஜசெக பொதுச் செயலாளர் அந்தோணி லோக் மறுத்திருக்கிறார்.

சட்டமன்றப் பொதுத் தேர்தலில் யாருக்கு தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என அந்தோணி லோக் தெரிவித்தார்.

அந்தோணி லோக்

பக்காத்தான் ஹாரப்பான் கட்சிகளுக்கிடையில் இன்னும் தொகுதி ஒதுக்கீடு குறித்து முடிவுகள் எடுக்கப்படாததால், சம்பந்தப்பட்ட தொகுதிகளின் வேட்பாளர்களும் முடிவு செய்யப்படவில்லை என அந்தோணி லோக் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice