Home கலை உலகம் ஆஸ்ட்ரோ : ‘பேமிலி பியூட் மலேசியா’ 3 மொழிகளில் நிகழ்ச்சி

ஆஸ்ட்ரோ : ‘பேமிலி பியூட் மலேசியா’ 3 மொழிகளில் நிகழ்ச்சி

615
0
SHARE
Ad

*பிரபலமான உள்ளூர் திறமையாளர்களான டாக்டர் ஜே. ராம், நபில் அகமது மற்றும் டக்ளஸ் லிம் ஆகியோர் தொகுத்து வழங்கும் உலகளாவிய வெற்றி வடிவமானப் ‘பேமிலி பியூட்’-இன் மூன்று உள்ளூர் பதிப்புகளை ஆஸ்ட்ரோ அறிமுகப்படுத்துகிறது!

*’பேமிலி பியூட் மலேசியா’-இன் ஒளிபரப்பு வடிவம் மற்றும் விபரங்கள்

பிரத்தியேகமாக ஆஸ்ட்ரோ வாயிலாக ‘பேமிலி பியூட்’ தனது சிறகுகளை மலேசியாவில் விரிவுபடுத்துகிறது. ‘பேமிலி பியூட்’-ஐ மாற்றியமைப்பதற்கானப் பிரீமண்டிலுடனான ஒப்பந்தத்தில் கடந்த ஆண்டு ஆஸ்ட்ரோ கையெழுத்திட்டப் பிறகு, ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202)-இல் ஒளிபரப்பப்படும் தமிழ், ஆஸ்ட்ரோ ரியா (அலைவரிசை 104)-இல் ஒளிபரப்பப்படும் மலாய், மற்றும் ஆஸ்ட்ரோ பிரைம்டைம் (அலைவரிசை 704)-இல் ஒளிபரப்பப்படும் ஆங்கிலம் ஆகிய ‘பேமிலி பியூட் மலேசியா’-இன் மூன்று பதிப்புகளைத் தயாரிக்கும் பணியில் ஆஸ்ட்ரோ ஈடுபட்டுள்ளது.

மலேசியாவின் பிரபலத் தொகுப்பாளர்களான டாக்டர் ஜே. ராம் (தமிழ்), நபில் அகமது (மலாய்), மற்றும் டக்ளஸ் லிம் (ஆங்கிலம்) ஆகியோர் அமெரிக்காவின் முன்னணி நகைச்சுவை நடிகர் ஸ்டீவ் ஹார்வியின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி ‘பேமிலி பியூட் மலேசியா’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் கடமைகளை ஏற்பர்.

போட்டியிடும் இரண்டு குடும்ப அணியின் முதல் போட்டியாளர் (அணியின் தலைவர்) முதல் கேள்விக்குப் பதிலளிக்க மேடையில் இடம் பெறவே ‘பேமிலி பியூட் மலேசியா’ விளையாட்டுத் தொடங்கும். பஸரை வேகமாக அழுத்தும் போட்டியாளர் முதலில் பதில் அளிப்பார்.

#TamilSchoolmychoice

கொடுக்கப்பட்டப் பதில் ஆய்வின் உயர்ந்த நிலையில் இருந்தால், அடுத்தக் கேள்விக்குப் பதில் அளிக்கும் வாய்ப்பை அக்குடும்பத்தினர் பெறுவர். இல்லையெனில், எதிரணியின் குடும்ப உறுப்பினர் அச்சுற்றைக் கைப்பற்றுவதற்கு ஆய்வின் உயர்ந்த நிலையில் உள்ளப் பதிலைக் கூற முயற்சிப்பார்.

100 மலேசியர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் பதில்கள் இருக்கும். அதிகப் புள்ளிகளைப் பெறும் அணி ‘விரைவானப் பணம்’ (Fast Money) சுற்றுக்கு முன்னேறும் மற்றும் ரிம5,000.00 ரொக்கப் பரிசை வெல்லும் வாய்ப்பைப் பெறும்.

ஆஸ்ட்ரோ ‘விளையாட்டுகள்’ வடிவத்தில் பொழுதுபோக்கு உள்ளடக்கத்தைத் தயாரிப்பதை ஆதரிக்கிறது. மேலும் அதன் சுயத் தயாரிப்பு நிகழ்ச்சிகளான ‘ஆல் இன் டு வின்’ (All In To Win) மற்றும் ‘தி ஏ கேம்’ (The A Game) போன்றவற்றை உருவாக்குகிறது.

பிரபலங்கள் தங்கள் குடும்பத்தினருக்குத் தலைவராக இடம் பெறும் ‘செலிபிரிட்டி பேமிலி பியூட் மலேசியா’ எனப்படும் ஒரு மணி நேர ஒன்பது சிறப்பு அத்தியாயங்கள் ஒவ்வொரு திங்கள், இரவு 11 மணிக்கு ஒளிபரப்பாகும். பொது மக்கள் பங்கேற்க்கும் 30 நிமிட 18 அத்தியாயங்கள் ஒவ்வொரு செவ்வாய், இரவு 11 மணிக்கு ஒளிபரப்பாகும்.

‘புராஜெக் ஹை கவுன்சில்’ (Projek High Council), ‘அண்டாய் இத்து தக்டீர்ஞா’ (Andai Itu Takdirnya) மற்றும் இஸ்திரி ஹலால்’ (Isteri Halal) நடிகர்கள் மற்றும்; ‘கேகார் வாகான்சா’ (Gegar Vaganza) மற்றும் ‘பிக் ஸ்டேஜ்’ (Big Stage) முன்னாள் பங்கேற்ப்பாளர்கள் ஆகிய ஆஸ்ட்ரோ தயாரித்த நிகழ்ச்சிகளின் பிரபலக் கலைஞர்கள் இடம் பெறும் ஒன்பது சிறப்பு அத்தியாயங்கள் நோன்புப் பெருநாளை முன்னிட்டு 1 ஷாவால் முதல் 9 ஷாவால் வரை, மதியம் 12 மணிக்கு ஒளிபரப்பாகும். இந்தப் பிரபலங்கள் வெற்றிப் பெற்ற தொகைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட தொண்டு செய்யும் நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கப்படும்.

மார்ச் 27, 2023 முதல் ஒவ்வொரு திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமைகளிலும் இரவு 11.00 மணிக்கு ஆஸ்ட்ரோ ரியா (அலைவரிசை 104)-இல் ‘பேமிலி பியூட் மலேசியா’-இன் மலாய் பதிப்புப் பிரத்தியேகமாக ஒளியேறும் . ‘பேமிலி பியூட் மலேசியா’-இன் தமிழ் பதிப்பு மே 2023-இல் ஒளியேரும் மற்றும் ‘பேமிலி பியூட் மலேசியா’-இன் ஆங்கிலப் பதிப்பு செப்டம்பர் 2023-இல் ஒளியேரும். மேலும் நெகிழ்வான விருப்பங்களுக்கு ஆஸ்ட்ரோ பாக்ஸ் மற்றும் ஆஸ்ட்ரோ கோ வாயிலாக ஆன் டிமாண்ட் மூலம் ‘பேமிலி பியூட் மலேசியா’-ஐ ஸ்ட்ரீம் செய்யலாம். முதல் ஆறு மாதங்களுக்கு ஒரு மாதத்திற்கு ரிம99.99 கட்டணத்தில் அதிகச் சேமிப்பிற்காகப் Pek Premium 1-ஐப் பெறுங்கள். ஆஸ்ட்ரோவில் ‘பேமிலி பியூட் மலேசியா’-ஐக் கண்டு மகிழ, 03-9543 3838 என்ற எண்ணுக்குப் புலனம் வாயிலாக “NAK ASTRO” என்று அனுப்புங்கள்.

அஸ்லின் ரெசா அஸ்மி

ஆஸ்ட்ரோ மலாய் அலைவரிசை வணிகத்தின் துணைத் தலைவர் அஸ்லின் ரெசா அஸ்மி பின்வருமாறு தெரிவித்தார்.

“மலேசியர்களுக்கான முக்கியப் பொழுதுபோக்குத் தளமாக நிறுவனத்தின் இலக்குக்கு ஏற்ப, வாடிக்கையாளர்களுக்குச் சமீபத்திய மற்றும் புதிய உள்ளடக்கத்தை வழங்க உள்ளடக்கங்களை ஆஸ்ட்ரோ தீவிரமாக விரிவுப்படுத்துகிறது. பிறச் சர்வதேசத் தயாரிப்புகளுக்கு இணையாக நாங்கள் வழங்க விரும்பும் உள்ளடக்கம் பிரீமியம் மற்றும் உயர் தரமானது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்ச்சியானப் ”பேமிலி பியூட்’-ஐ மலேசியாவிற்குக் கொண்டு வருவதன் மூலம், அது எங்கள் சலுகைகளை மேம்படுத்துகிறது. அதைப் பல்வேறு மொழிகளில் மாற்றியமைப்பதன் மூலம், அதன் பொருத்தத்திற்கு முன்னுரிமைக் கொடுக்க முடியும் என்றும், ஒவ்வொரு தொகுப்பாளரும் தங்கள் சுயப் பாணியைக் கொண்டு வர முடியும் என்றும் நாங்கள் நம்புகிறோம். இந்த நிகழ்ச்சியின் சகிப்புத்தன்மை மற்றும் நீண்டகாலப் பிரபலம், உலகளாவியப் பார்வையாளர்கள் இது போன்ற ‘விளையாட்டுகளை’ மிகவும் விரும்புகிறார்கள் என்பதையும் அவர்கள் எப்பொழுதும் மேலும் பலவற்றிற்குத் திரும்பி வருவார்கள் என்பதையும் நிரூபிக்கிறது.

எக்ஸ்ஆர் (XR) தொழில்நுட்பத்தை முதன்முதலில் பயன்படுத்துவதன் மூலம், ‘பேமிலி பியூட் மலேசியா’-இன் தயாரிப்பை மேலும் அதிகரிக்கவும், பல தாய்மொழிகளில் தயாரிப்பை விரிவுபடுத்தவும் உதவுகிறது. எங்களின் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இணையற்றப் பார்வை அனுபவத்தை வழங்க ஆஸ்ட்ரோ எப்போதும் உறுதிபூண்டுள்ளது.

இந்த உற்சாகத்தை எங்களின் தற்போதைய மற்றும் சாத்தியமான வாடிக்கையாளர்களால் உணர முடியும் என்று நம்புகிறோம். ‘பேமிலி பியூட்’ விளையாட்டில் ஆர்வமுள்ளவர்கள், மலேசியப் பதிப்பை உங்கள் தொலைக்காட்சித் திரையிலோச் சாதனத்திலோப் பார்க்கும் வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்.”