Home கலை உலகம் ZEE5 மற்றும் Viu செயலிகள் இப்போது ஆஸ்ட்ரோ அல்ட்ரா மற்றும் அல்டி பெட்டிகளில் கிடைக்கிறது

ZEE5 மற்றும் Viu செயலிகள் இப்போது ஆஸ்ட்ரோ அல்ட்ரா மற்றும் அல்டி பெட்டிகளில் கிடைக்கிறது

618
0
SHARE
Ad

ZEE5 மற்றும் Viu செயலிகள் இப்போது ஆஸ்ட்ரோ அல்ட்ரா மற்றும் அல்டி பெட்டிகளில் கிடைக்கிறது

கோலாலம்பூர் – புதிய ஆஸ்ட்ரோ அனுபவத்தின் ஒரு பகுதியாக, எங்கள் வாடிக்கையாளர்களின் வீடுகள் மற்றும் சாதனங்களுக்கு உலகளாவியப் பொழுதுபோக்கைக் கொண்டு வர அல்ட்ரா மற்றும் அல்டி பெட்டிகள் இரண்டிற்கும் ZEE5 மற்றும் Viu-ஐ வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மேலும் எங்கள் தளத்தில் உள்ளப் பிரீமியம் ஸ்ட்ரீமிங் செயலிகளின் மொத்த எண்ணிக்கையை 10-ஆக விரிவுப்படுத்துகிறோம். இன்று முதல், ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் அல்ட்ரா மற்றும் அல்டி பெட்டிகள் வழியாகத் தங்கள் பெரியத் திரை டிவி அல்லது கைப்பேசிச் சாதனங்கள் வழியாக இரண்டு செயலிகளையும் அணுகி, கலகலப்பான அனுபவத்தைப் பெற முடியும்.

தெற்காசிய உள்ளடக்கத்திற்கான உலகின் மிகப்பெரியத் தளம் ZEE5, அசல் அம்சங்கள் உட்படப் பாலிவுட் மற்றும் கோலிவுட் உள்ளடக்கம்; திரைப்படங்கள்; Zee நெட்வொர்க் அலைவரிசைகளில் இருந்து மிகவும் விரும்பப்படும் டிவி நிகழ்ச்சிகள்; இந்தி, தமிழ், பெங்காலி, பஞ்சாபி மற்றும் பிற மொழிகள் உட்பட 18 மொழிகளில் (12 இந்திய மற்றும் 6 சர்வதேச மொழிகள்) குறும்படங்கள் மற்றும் பாராட்டப்பட்ட நாடகங்கள் ஆகிய விரிவான நிகழ்ச்சிகளை வழங்குகிறது. இது இந்திய மற்றும் தெற்காசியப் பொழுதுபோக்கின் தீவிர ரசிகர்களுக்குச் சரியான இடமாக அமைகிறது.

#TamilSchoolmychoice

பிரபலத் திரைப்பட இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கியத் தமிழ் நாடகம், தி கிரேட் இந்தியன் கிச்சன்; காதல்-நகைச்சுவை, மிடில் கிளாஸ் காதல்; நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தா இடம் பெற்ற இறுதி நகைச்சுவைத் திரைப்படமானக் கஞ்சூஸ் மகிச்சூஸ், மற்றும் சுனில் குரோவர், சப்னா பப்பி மற்றும் நிகில் விஜய் ஆகியோர் நடித்த யுனைடெட் கச்சே உட்படத் தங்களுக்குப் பிடித்த அனைத்து நிகழ்ச்சிகளையும் ஸ்ட்ரீமிங் செய்யவும் பிரத்தியேகமான உள்ளடக்கம் மற்றும் விளம்பரமில்லா அனுபவத்திற்காகவும்  ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு ரிம10.60 (RRP ரிம14.90) சந்தாவில் ZEE5 பிரீமியத்தைச் சேர்க்கலாம்.

தற்போது, ​​ஆஸ்ட்ரோவின் பிரீமியம் ஸ்ட்ரீமிங் செயலிகள் வரிசையில் BBC Player, beIN SPORTS CONNECT, டிஸ்னி+ ஹாட்ஸ்டார், HBO GO, iQIYI, நெட்ஃபிளிக்ஸ், TVBAnywhere+, Viu, ZEE5 மற்றும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இலவசமாகக் கிடைக்கப்பெறும் எங்களின் சொந்தச் செயலியான ஆஸ்ட்ரோ கோ ஆகியவை அடங்கும்.

அல்டி பெட்டியில் Viu சேர்ப்பதன் மூலம், அல்டி பெட்டியைக் கொண்ட அனைத்து வாடிக்கையாளர்களும் ஜூன் 8, 2023 வரை Viu பிரீமியத்தை இலவசமாகத் தங்கள் பெட்டி, www.viu.com அல்லது Viu கைப்பேசிச் செயலியில் ஸ்ட்ரீமிங் செய்யலாம் மற்றும் Nenek Bongkok Tiga, Taxi Driver 2, The Secret Romantic Guesthouse மற்றும் Royal Doctor போன்ற நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழலாம். உங்கள் பெட்டியின் முகப்புப் பக்கத்தில் செயலியைத் திறந்து, உங்களுக்குப் பிடித்த அனைத்து நிகழ்ச்சிகளையும் ஸ்ட்ரீமிங் செய்யத் தொடங்குங்கள்.

அல்ட்ரா/அல்டி பெட்டியில் “ZEE5” செயலியை அணுக, ஆஸ்ட்ரோ ரிமோட் கண்ட்ரோலில் “ஹோம்” என்பதை அழுத்தி, “ஆப்ஸ்” கீழ் உள்ளச் செயலியைத் தேர்ந்தெடுக்கவும். QR குறியீட்டை ஸ்கேன் செய்து உங்கள் ZEE5 கணக்கில் உள்நுழைவதன் மூலம் உங்கள் கணக்கை உங்கள் பெட்டியுடன் இணைக்கத் திரையில் உள்ள விதிகளைப் பின்பற்றவும். பின் உங்கள் விரல் நுனியில் ஆயிரக்கணக்கான உள்ளடக்கங்களை அணுகலாம்!

அல்ட்ரா/அல்டி பெட்டி வழியாக உங்கள் பெரியத் திரை டிவியில் இருந்தாலும் சரி அல்லது ஆண்ட்ராய்டு அல்லது ஐஓஎஸ் சாதனங்களில் கிடைக்கும் ZEE5 கைப்பேசிச் செயலியிலும் சரி, www.astro.com.my/ZEE5-ஐ அணுகுவதன் மூலம் சிறந்தச் சேமிப்பிற்காக ZEE5-ஐ பதிவுச் செய்யலாம்.