Home Featured நாடு அமைதிப் பேரணிச் சட்டத்தின் கீழ் பெர்சே 5 நடக்க வேண்டும் – காலிட் கருத்து!

அமைதிப் பேரணிச் சட்டத்தின் கீழ் பெர்சே 5 நடக்க வேண்டும் – காலிட் கருத்து!

572
0
SHARE
Ad

Khalid Abu Bakarகோலாலம்பூர் – அமைதிப் பேரணிச் சட்டம் (பிஏஏ) 2012-ன் கீழ், பெர்சேவின் 5வது பேரணி நடக்குமானால் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.

“அவர்கள் செய்ய வேண்டியது எல்லாம் பிஏஏ-வின் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். நாங்கள் அவர்களுக்கு ஆதரவு அளிப்பது மகிழ்ச்சி தான்” என்று தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலி அபு பக்கர் தெரிவித்துள்ளார்.

நேற்று பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா வெளியிட்ட அறிக்கை ஒன்றில், விரைவில் 1எம்டிபி விசாரணையை வலியுறுத்தி பெர்சே 5 பேரணி நடத்தவிருப்பதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice