மேலும் அதுபற்றி திரெங்கானு மாநிலத்தின் முன்னாள் மந்திரிபுசாருமான இட்ரிஸ் ஜூசோ கூறுகையில், பாஸ் ஆதரவாளர்களின் இந்த நடவடிக்கை எதிர்வரும் 13 ஆவது பொதுத் தேர்தலில் திரங்கானுவில் தேசிய முன்னணி அரசு மாபெரும் வெற்றியடையும் என்பதைக் குறிக்கிறது என்று கூறினார்.
கடந்த மூன்று நாட்களாக பெசுட் அம்னோவின் சார்பாக முன்னாள் பாஸ் ஆதரவாளர்களின் வீடுகளுக்குச் சென்று, அவர்களது பல்வேறு பிரச்சனைகள் குறித்து கலந்தாலோசித்து வருகிறோம்.
கடந்த 2004 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது,பிரச்சாரத்திற்கு கூட இதே பாஸ் ஆதரவாளர்களின் வீடுகளுக்குள் நாங்கள் நுழைய முடியவில்லை. ஆனால் இப்போது நிலைமை முற்றிலும் மாறுபட்டுவிட்டது. தேசிய முன்னணி அரசு திரெங்கானுவில் மிகவும் வலுவான நிலையில் உள்ளது என்றார்.