Home Featured நாடு முஸ்லிம்கள், முஸ்லிம் அல்லாத பணிப்பெண்களை வேலைக்கு வைக்க முடியாது – புதிய கட்டுப்பாடு!

முஸ்லிம்கள், முஸ்லிம் அல்லாத பணிப்பெண்களை வேலைக்கு வைக்க முடியாது – புதிய கட்டுப்பாடு!

751
0
SHARE
Ad

maidகோலாலம்பூர் – மலேசியாவில் முஸ்லிம்கள், முஸ்லிம் அல்லாத பணிப்பெண்களை வேலைக்கு அமர்த்த முடியாது என்ற குடிநுழைவு இலாகாவின் புதிய உத்தரவை, பாரபட்சம் என்று வர்ணித்துள்ள மசீச, அது நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் ஒற்றுமையைப் பாதித்துவிடும் என்று தெரிவித்துள்ளது.

இது குறித்து மசீச மத நல்லிணக்கப் பிரிவின் தலைவர் டத்தோஸ்ரீ டி லியான் கேர் இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிகாரிகள் கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் விதிக்கும் போது, மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இந்தப் புதிய கட்டுப்பாடு, பொதுமக்களுக்கு கூடுதலான செலவுகளையும், கடினமான சூழ்நிலைகளையும், சிரமத்தையும் ஏற்படுத்தும் என்பதால் அதனைத் தவிர்க்க வேண்டும் என்றும், குறிப்பாக இனம் அல்லது மதம் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்பட்டால் அது மேலும் சிக்கலையே ஏற்படுத்தும் என்றும் டி லியான் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், ஏற்கனவே, மலேசியர்கள் இனம், மதம் அடிப்படையில் “அதிகமாகவே பிரிந்து” கிடக்கிறார்கள் என்று எச்சரித்துள்ள டி லியான், இந்த புதியக் கட்டுப்பாடு மேலும் பிளவுகளை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை, மலேசிய பணிப்பெண் முதலாளிகள் சங்கத்தின் (Malaysian Maid Employers Association) தலைவர் எங்கு அஹ்மட் பௌசி கூறுகையில், இந்தப் புதிய கொள்கையின் காரணமாக முஸ்லிம்களுக்கு பணிப்பெண்களை வழங்குவது குறைந்து போகும் என்று தெரிவித்துள்ளார்.