Home நாடு இந்தோனேசிய வீட்டுப் பணிபெண்கள் : செலவினங்கள்- பாதுகாப்பு குறித்த விளக்கங்கள்

இந்தோனேசிய வீட்டுப் பணிபெண்கள் : செலவினங்கள்- பாதுகாப்பு குறித்த விளக்கங்கள்

760
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : கடந்த ஏப்ரல் 1, 2022இல் இந்தோனேசிய வீட்டுப்பணிப் பெண்கள் தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை இந்தோனிசியத் தலைநகர் ஜாகர்த்தாவில் கையெழுத்திடப்பட்டது.

மலேசியாவின் சார்பில் மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் இந்த உடன்பாட்டில், மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி, இந்தோனிசிய அதிபர் ஜோகோவி விடோடோ ஆகியோர் முன்னிலையில் கையெழுத்திட்டார். இந்தோனிசியாவின் சார்பில் அந்நாட்டின் மனித வள அமைச்சர் இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டார்.

அந்த அடிப்படையில் விரைவில் அவர்களை வரவழைப்பதற்கான ஏற்பாடுகள் தொடங்கும். இதற்கான விளக்கங்களையும், வழிகாட்டிகளையும் மனித வள அமைச்சு வெளியிட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

இந்தோனேசிய வீட்டுப் பணிபெண்களை வேலைக்கு எடுக்க விரும்பினால், இந்தோனேசியா மற்றும் மலேசியாவை உள்ளடக்கிய 15 வகையான செலவினங்கள் இதில் அடங்கும்.

குறிப்பிட்ட சில :-

மலேசியாவில் இந்தோனேசியாவில்
1. குடிநுழைவு பாதுகாப்புத் தொகை கடப்பிதழ்
2. காப்புறுதி வேலை விசா
3. மருத்துவப் பரிசோதனை மருத்துவ சான்றிதழ்
4. லெவி தகுதிச் சான்றிதழ்
5. வேலை அனுமதிக்கான கட்டணம் Psikologi சான்றிதழ்

 

அனைத்துலக தொழிலாளர் அமைப்பு வெளியிட்ட நியாயமான முறையில் தொழிலாளர்களை எடுக்கும் பரிந்துரைபடி, இந்த செலவுகள் அனைத்தையும் முதலாளிகள் ஏற்க வேண்டும்.

3 மாதத்திற்கு ஒருமுறை, இந்தோ – மலேசிய கூட்டுச் செயற்குழுவினால் இந்த செலவினங்கள் மதிப்பாய்வு செய்யப்படும்.

தனிமைப்படுத்துதல் இல்லாதபடியால் அதற்கான செலவு மிச்சப்படும்.