Home கலை உலகம் ஆஸ்ட்ரோ : இந்தியப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் – அதிகமான உள்ளூர், பன்னாட்டு நிகழ்ச்சிகள்

ஆஸ்ட்ரோ : இந்தியப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் – அதிகமான உள்ளூர், பன்னாட்டு நிகழ்ச்சிகள்

784
0
SHARE
Ad

  • இந்தியப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களை முன்னிட்டு ஆஸ்ட்ரோவில் முதல் ஒளிபரப்பாகும் அதிகமான உள்ளூர் மற்றும் பன்னாட்டு நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழுங்கள்!

கோலாலம்பூர்: இவ்வருட இந்தியப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை முன்னிட்டுக், கர்நாடக இசை நிகழ்ச்சி, இசை நிகழ்ச்சி, நகைச்சுவை டெலிமூவி, கல்விச் சார்ந்த கேப்சூல்கள், புதுப்பிக்கப்பட்டச் செய்தி மற்றும் நடப்பு நிகழ்வுகள் சார்ந்த நிகழ்ச்சி, காதல் நாடகத் திரைப்படம் உள்ளிட்ட முதல் ஒளிபரப்பாகும் மேலும் அதிகமான உள்ளூர் மற்றும் பன்னாட்டு நிகழ்ச்சிகளை டிவி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கலாம். ராகாவில் இந்தியப் புத்தாண்டுச் சிறப்பு நிகழ்ச்சிகளை அனைத்து மலேசியர்களும் வானொலியிலும் SYOK செயலியிலும் கேட்டு மகிழலாம்.

ஆஸ்ட்ரோவின் இந்திய வாடிக்கையாளர் வணிகப் பிரிவுத் துணைத் தலைவர், பிரேம் ஆனந்த் கூறுகையில், “எங்கள் வாடிக்கையாளர்கள் இந்தியப் புத்தாண்டை வரவேற்கும் இத்தருணத்தில், அவர்களுடன் புதியத் தொடக்கத்தினை மிகவும் உற்சாகமான உள்ளூர் மற்றும் சர்வதேச முதல் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளின் மூலம் கொண்டாடுகிறோம். நாங்கள் தொடர்ந்து உள்ளூர் உள்ளடக்கத்தில் முதன்மை வகிப்பதால் கலாச்சாரம், கல்வி, மொழி மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றை மையமாகக் கொண்ட மேலும் பல உள்ளூர் நிகழ்ச்சிகளை எங்கள் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கலாம். எங்கள் வாடிக்கையாளர்களின் ஆதரவிற்காக நாங்கள் நன்றிக் கூறுகிறோம். மேலும், இந்தப் புத்தாண்டில் அவர்கள் இந்நிகழ்ச்சிகளை அனுபவித்து மகிழ்வார்கள் என்று நம்புகிறோம்” எனத் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

பின்வரும் முதல் ஒளிபரப்புக் காணும் உள்ளூர் நிகழ்ச்சிகளை வாடிக்கையாளர்கள் கண்டு மகிழலாம்:


• ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201)-இல் சிறப்புக் கர்நாடக இசை நிகழ்ச்சி, நித்யாதா; கல்விச் சார்ந்தக் கேப்சூல்கள், அறிந்ததும் அறியாததும்; நகைச்சுவை டெலிமூவி, திட்டம் போட்டு கடத்துர கூட்டம்; மற்றும் ஜோதிட நிகழ்ச்சிச், சித்திரை புத்தாண்டு ராசிபலன்.


• ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202)-இல் இசை நிகழ்ச்சி, சந்தேஷ் கைக; முதல் உள்ளூர் தமிழ் மருத்துவத் தொடர், வைரஸ்; மற்றும் புதுப்பிக்கப்பட்டச் செய்தி மற்றும் நடப்பு நிகழ்வுகள் சார்ந்த நிகழ்ச்சி, ஆஸ்ட்ரோ செய்திகள்.

அதுமட்டுமின்றி, வாடிக்கையாளர்கள் பின்வரும் பன்னாட்டு தமிழ், மலையாளம் மற்றும் இந்தி நிகழ்ச்சிகளையும் கண்டுக் களிக்கலாம்:


• ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201)-இல் அனிமேஷன் திரைப்படமான மோட்டு பட்லு இன் டபள் ட்ரபல்; மற்றும் மலையாளத் திரில்லர் திரைப்படமான குருதி.

• ஜீ தமிழ் எச்டி (அலைவரிசை 223)-இல் விளையாட்டு நிகழ்ச்சிகள், சூப்பர் குயின்ஸ் vs சூப்பர் ஸ்டார்ஸ் மற்றும் ஆஹா கல்யாணம்; விவாத நிகழ்ச்சிப் பட்டிமன்றம்; மற்றும் சமையல் நிகழ்ச்சி, டமால் டுமீல் கிட்சன்.


• ஸ்டார் விஜய் எச்டி (அலைவரிசை 221)-இல் அதிரடித் திரைப்படம், புஷ்பா.

• BollyOne HD (அலைவரிசை 251)-இல் அதிரடி-நாடகத் திரைப்படம், அன்திம் தி பைனல் துருத் (Antim: The Final Truth).

• Astro First (அலைவரிசை 480)-இல் காதல் நாடகத் திரைப்படம், ராதே ஷ்யாம்.
ஏப்ரல் 14 முதல் தொலைக்காட்சியில் துல்லிய ஒளிபரப்புக்கு மேம்படுத்தப்பட்ட ஆஸ்ட்ரோ வெள்ளித்திரை (அலைவரிசை 203)-இல் அனைத்து ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களும் சார்பட்டா பரம்பரை மற்றும் கார்பன் ஆகிய முதல் ஒளிபரப்பாகும் தமிழ் பிளாக்பஸ்டர் திரைப்படங்களைக் கண்டு மகிழலாம்.

ராகா வானொலியிலும் சிறப்பு நிகழ்ச்சிகள்

ராகா வானொலியில், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் பஞ்சாபி ஆகிய பல மொழிகளை உள்ளடக்கியச் சிறப்புப் புத்தாண்டுப் பாடலை ராகா இரசிகர்கள் கேட்டு இரசிக்கலாம். நேயர்கள் ஓர் ஆடியோ நாடகத்தில் பங்கேற்பதோடு ஜோதிடப் பலன்களையும் வானொலி மற்றும் SYOK செயலியில் கேட்கலாம்.

#RAAGAINY என்ற ஹேஷ்டேக்குடன் சமூக ஊடகங்களில் தங்களுக்குப் பிடித்த பண்டிகைத் தருணங்களைப் பதிவிடும் போது, இரசிகர்கள் ராகாவின் பிரத்தியேகமான வணிகப் பொருட்களை வெல்லும் வாய்ப்பைப் பெறுவர். மேல் விபரங்களுக்கு ராகாவின் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.

முதல் ஒளிபரப்புக் காணும் ஆஸ்ட்ரோவின் இந்தியப் புத்தாண்டு நிகழ்ச்சிகளின் மேல் விபரங்களுக்கு content.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.