இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் திடீரென அரசியல் திருப்பம் ஏற்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் சகோதரர் – 70 வயதான – ஷெபாஸ் ஷாரிப் புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை (9 ஏப்ரல்) நம்பிக்கைத் தீர்மானத்தின் மூலம் பதவி வீழ்த்தப்பட்டிருக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானுக்குப் பதிலாக ஷெபாஸ் ஷாரிப் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
இந்த நகர்வைத் தொடர்ந்து இம்ரான் கான் பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினராகவும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
நம்பிக்கை வாக்கெடுப்பின்போது இம்ரான் கானின் கட்சியினர் நாடாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.