Home உலகம் பாகிஸ்தான் : நாடாளுமன்றம் கலைப்பு செல்லாது! மீண்டும் நம்பிக்கைத் தீர்மான வாக்கெடுப்பு – உச்ச நீதிமன்றம்...

பாகிஸ்தான் : நாடாளுமன்றம் கலைப்பு செல்லாது! மீண்டும் நம்பிக்கைத் தீர்மான வாக்கெடுப்பு – உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

578
0
SHARE
Ad
இம்ரான் கான்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நடைபெற்று வரும் அரசியல் சம்பவங்கள் அந்நாட்டின் உச்ச நீதிமன்றத் தீர்ப்பினால் புதிய திருப்பங்களை எதிர்நோக்கியிருக்கிறது.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தைக் கலைத்து துணை சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது என பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை (ஏப்ரல் 7) தெரிவித்துள்ளது.

நாளை சனிக்கிழமை ஏப்ரல் 9-ல் மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

#TamilSchoolmychoice

பாகிஸ்தானில், பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது, கடந்த ஏப்ரல் 3-ம் தேதி நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட இருந்தது.

இத்தீர்மானத்தை நிராகரித்து, துணை சபாநாயகர் காசிம் கான் சுரி உத்தரவிட்டார். அடுத்து, பிரதமர் இம்ரான் கானின் பரிந்துரையை ஏற்று, அந்த நாட்டின் அதிபர் ஆரிப் அல்வி நாடாளுமன்றத்தைக் கலைக்கும் உத்தரவைப் பிறப்பித்தார்.

அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு ஒன்றைப் பதிவு செய்து இந்த விவகாரத்தை விசாரித்து.

வழக்கு தொடர்பான வாதங்களையும் அறிக்கைகளையும் பரிசீலித்த பாகிஸ்தானின் உச்ச நீதிமன்றம் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை துணை சபாநயகர் நிராகரித்து நாடாளுமன்றத்தைக் கலைக்க உத்தரவிட்டது சட்டவிரோதமானது எனத் தீர்ப்பளித்தது.

நாடாளுமன்றம்  மீண்டும் செயல்பட வேண்டும், நாளை 9-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனால், பொதுத்தேர்தலை நடத்த வேண்டும் என அதிபர் பிறப்பித்த உத்தரவும் செல்லாது எனவும் அளிக்கப்பட்ட  உச்சநீதிமன்ற தீர்ப்பால் இம்ரான் கானுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.